பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் 11வது உச்சி மாநாடு பற்றி இந்தியாவின் பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள்

பூங்கோதை 2019-11-11 11:24:45
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் 11வது உச்சி மாநாடு நவம்பர் 13 மற்றும் 14ஆம் நாள் பிரேசிலின் தலைநகரில் நடைபெறவுள்ளது. இது குறித்து, இந்தியாவின் பல்வேறு சமூக வட்டாரத்தினர் மிகுந்த எதிர்ப்பார்ப்பைத் தெரிவித்துள்ளனர். இரு தரப்பு உறவை ஆழமாக்கும் முக்கிய வாய்ப்பாக இது திகழ்கிறது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் மூத்த ஊடக வியலாளரும், விமர்சகருமான மாலன் இது குறித்து கூறுகையில், சீனாவும் இந்தியாவும், பொது அடிப்படையைக்கண்டறிந்து வேற்றுமைகளை ஒதுக்கிவைக்கும் அடிப்படையில், கூட்டு வளர்ச்சியை நாட வேண்டும் என்றார்.

மேலும், இவ்வுச்சி மாநாட்டுக்குப்பிறகு, இந்திய மக்களுக்கு மேலதிக வேலை வாய்ப்புகளைச் சீனத் தொழில் நிறுவனங்கள் வழங்க வேண்டும் என விரும்புவதாக பிஓய்டி என்னும் வாகன நிறுவனத்தைச் சேர்ந்த இந்தியச் சந்தை மேலாளர் தங்கசெல்வி தெரிவித்தார்.

தவிரவும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜெய சக்திவேல் பேசுகையில், எதிர்காலத்தில், கல்வி தரத்தை உயர்த்துவது மற்றும் கல்வி வசதிகளைப் பகிர்ந்து கொள்வதில், இரு நாடுகளும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என விரும்புவதாக கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்