சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை குறித்த அமெரிக்க அதிகாரியின் கூற்று உண்மைக்குப் புறம்பானது: சீனத் தூதர்

மதியழகன் 2019-11-23 15:38:05
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கடந்த 6 ஆண்டுகளில் சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதைக் கட்டுமானம், பாகிஸ்தானுக்குப் பெரும் பொருளாதார மற்றும் சமூக பயன்களை கொண்டு வந்துள்ளது என்று பாகிஸ்தானுக்கான சீனத் தூதர் யாவ்ஜிங் நவம்பர் 22ஆம் நாள் இஸ்லாம்பார்த்தில் தெரிவித்தார்.

அதோடு, அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பிரிவுக்கான முதன்மை துணை உதவிச் செயலாளர் ஏலிஸ் வெல்ஸ் சமீபத்தில் சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை குறித்து அவதூறாக பேசிய கருத்துக்களுக்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று யாவ் ஜிங் குறிப்பிட்டார்.

சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதையின் தலைமையில், எளிதில் தொழில் புரிவதற்கான உலகின் பட்டியலில், பாகிஸ்தான் கடந்த ஆண்டில் இருந்த 136ஆவது இடத்தில் இருந்து இவ்வாண்டு 108ஆவது இடத்திற்கு உயர்ந்துள்ளது. உலகின் போட்டித்திறன் தரவரிசையில் 108ஆவது இடத்தில் இருந்து 82ஆவது இடத்திற்கு உயர்ந்துள்ளது என்று உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் பொருளாதாரப் பாதைக் கட்டுமானத்தால், பாகிஸ்தானில் வேலை வாய்ப்புகளும் பொருளாதார வளர்ச்சியும் அதிரித்துள்ளன. பாகிஸ்தானில் மின் பற்றாக்குறை குறைந்துள்ளதையும் யாவ் ஜிங் சுட்டிக்காட்டினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்