இந்திய துணை அரசுத் தலைவர்-வாங் யீ சந்திப்பு

2019-12-22 15:15:30
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ டிசம்பர் 21ஆம் நாள் புது தில்லியில் இந்தியத் துணை அரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவைச் சந்தித்துரையாடினார்.

இந்திய—சீன எல்லை விவகாரத்துக்கான சிறப்பு பிரதிநிதிகளிடையேயான 22ஆவது பேச்சுவார்த்தையில் ஆக்கப்பூர்வ முன்னேற்றம் காணப்பட்டுள்ளதற்கு வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்தார். இவ்வாண்டு இரு நாட்டுத் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவாகும். இதனை வாய்ப்பாகக் கொண்டு, உயர் நிலைப் பரிமாற்றத்தை நெருக்கமாக்கி, எதார்த்த ஒத்துழைப்பை ஆழமாக்கி, பண்பாட்டுப் பரிமாற்றத்தை வலுப்படுத்தி, இந்திய-சீன உறவின் வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்றும், சுமூகமான அண்டை நட்புறவுக் கொள்கையில் இந்தியா ஊன்றி நிற்பதாகவும், சீனாவுடன் இணைந்து, பிரதேசம் மற்றும் உலகின் அமைதி மற்றும் நிதானத்தைக் கூட்டாக பேணிகாக்க வேண்டும் என விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங்கும், இந்தியத் தலைமையமைச்சர் நரந்திர மோடியும் சென்னையில் நடத்திய அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பில், இரு நாட்டுறவின் வளர்ச்சிக்குரிய திசையைச் சுட்டிக்காட்டி, எல்லைப் பிரச்சினையை உகந்த முறையில் தீர்ப்பது குறித்து முக்கிய ஒத்த கருத்துக்கு வந்துள்ளனர். அடுத்த ஆண்டு இரு நாட்டு தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவாகும். அதனை முன்னிட்டு, இரு தரப்புறவு, புதிய வளர்ச்சி வாய்ப்பை எதிர்நோக்கும் வகையில், இரு தரப்பும் 70 கொண்டாட்ட நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளன என்று வாங் யி தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்