“கையோடு கை-2019” சீன-இந்திய பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சி

ஜெயா 2019-12-23 10:15:10
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-இந்திய தரைப்படைகளின் “கையோடு கை-2019” என்னும் பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டுப் பயிற்சி 20ஆம் நாள் மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங் நகரிலுள்ள உம்ராய் ராணுவ முகாமில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

14 நாட்கள் நடைபெற்ற இக்கூட்டுப் பயிற்சியில், இரு நாடுகள் முறையே 130 படை அதிகாரிகளை அனுப்பி அணிகளை உருவாக்கின.

இது, இரு நாட்டுத் தரைப்படைகள் நடத்திய 8ஆவது பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டுப் பயிற்சியாகும். மேலும், இந்தியாவில் நடைபெற்ற 4ஆவது கூட்டுப் பயிற்சியாகும்.

சீன கண்காணிப்புக் குழுவின் உறுப்பினரும் மூத்த ஆணையாளருமான வாங்வெய்ஜுன் கூறுகையில், இக்கூட்டுப் பயிற்சி, இரு நாடுகளுக்கிடையில் ஒன்றுக்கு மற்றதன் புரிந்துணர்வை அதிகரித்து, இரு நாட்டு படைகளுக்கிடையிலான பரிமாற்றத்தை மேலும் ஆழமாக்கியுள்ளது. அதோடு, பயங்கரவாதத்தைக் கூட்டாக எதிர்க்கும் இரு நாடுகளின் மனவுறுதியையும், பிரதேச நிதானத்தைப் பேணிக்காத்து, சிறந்த வளர்ச்சிச் சூழலை உருவாக்கும் இரு நாட்டுப் படைகளின் நல்ல எண்ணத்தையும் இது காட்டுகிறது என்று தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்