சீன-இந்திய மனிதத் தொடர்பு பரிமாற்றத்தின் புதிய வளர்ச்சி

இலக்கியா 2019-12-29 14:52:08
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2019ஆம் ஆண்டின் அக்டோபர் திங்கள் சீன-இந்தியத் தலைவர்கள் மகாபலிபுரத்தின் கோயில்களில் சந்திப்பு நடத்தினர். அதற்குப் பிறகு திரளான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் தொன்மையான கோயில்களைப் பார்வையிட்ட வண்ணம் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளில் சீன-இந்திய தலைவர்களின் வழிகாட்டுதலுடன் இரு நாட்டு மனிதத் தொடர்பு பரிமாற்றம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரு நாடுகளுக்கிடையில் பண்பாடு, ஊடகம், திரைப்படம், விளையாட்டு, சுற்றுலா, பாரம்பரிய மருத்துவம், யோகா, கல்வி, சிந்தனைக் கிடங்கு உள்ளிட்ட துறைகளில் பன்முகப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக, 2015ஆம் ஆண்டு முதல் இதுவரை சென்னையில் அமைந்துள்ள கிருஷ்ணமச்சர்யா யோகா கல்லூரி, சீனாவைச் சேர்ந்த 120 யோகா ஆசிரியர்களுக்குப் பயிற்சியளித்துள்ளது. சீனாவைச் சேர்ந்த குங் ஃபூ கலைஞர் ஒருவர் தமிழ்நாட்டில் குங் ஃபூ கலையைக் கற்றுக் கொடுத்து, உள்ளூர் மக்களால் போற்றப்பட்டு வருகிறார்.

எதிர்காலத்தில் சீன-இந்திய அரசியல் பரஸ்பர நம்பிக்கை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பில் உள்ளார்ந்த ஆற்றலை வெளிக்கொணர வேண்டும். இரு நாட்டு அரசு சாரா பரிமாற்றத்தைப் பெரிதும் முன்னேற்ற வேண்டுமென வல்லுநர்கள் குறிப்பிட்டனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்