இந்தியாவில் போக்குவரத்து விபத்து:20 பேர் சாவு

பூங்கோதை 2020-01-11 16:04:16
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பி.டி.ஐ. உள்ளிட்ட இந்தியாவின் பல செய்தி ஊடகங்கள் ஜனவரி 11ஆம் நாள் அதிகாலை வெளியிட்ட தகவல்களின்படி, இந்தியாவின் உத்தர பிரதேசத்தின் கன்னோஜ் பகுதியில் 43 பயணிகளுடன் பயணித்த பேருந்து ஒன்று, உள்ளூர் நேரப்படி ஜனவரி 10ஆம் நாளிரவு சரக்குந்து ஒன்றின் மீது மோதி தீப்பிடித்தது. இதுவரை இவ்விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்தனர். 21 பேர் காயமுற்றனர். தற்போது காயமுற்றோர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தொடர்புடைய பிரிவுகள், காயமுற்றோர்களுக்கு முடிந்த அளவில் உதவியளிக்க வேண்டும் என்று உத்தர பிரதேசத்தின் முதல் அமைச்சர் கட்டளையிட்டுள்ளார். அத்துடன், உத்தர பிரதேச அரசைச் சேர்ந்த சிறப்புக் குழு இவ்விபத்து நிகழ்ந்த இடத்துக்குச் சென்று தொடர்புடைய பணிகளில் ஈடுப்படத் துவங்கியுள்ளது.

மேலும், இவ்விபத்துக்கான இழப்பீடு பற்றிய விவரங்களையும் உத்தர பிரதேசம் வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்