மும்பையில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டம்!

சோமசுந்தரம் 2020-01-26 15:37:19
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவின் வர்த்தக மையமான மும்பையில் உள்ள குவாங் குங் எனும் பழம் பெரும் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் சீனப் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

மும்பையில் 1200 முதல் 1500 சீன மக்கள் வசித்து வருவதாகவும், அவர்கள் திருமணம், பண்டிகை, குழந்தைகளின் பிறந்த நாள் போன்ற நாட்களில் இங்கு வந்து ஆசிர்வாதம் பெறுவதாக இவ்வாலயத்தின் பாதிரியாரான ஆல்பர்ட், கூறினார்.

ஆலயத்திற்கு வெளியே சீன மற்றும் இந்திய மாணவர்கள் ஒன்றாக இணைந்து சீனப் பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்ந்தனர். சீனக் கலாச்சாரத்தின் முக்கிய நடனமான சிங்க நடனம் ஆண்டுதோறும் இங்கு ஆடப்படுகிறது என்று சீன வம்சாவளியைச் சேர்ந்த 35 வயதான நடன கலைஞரான ஜாக்கி கூறினார்..

மும்பையில் உள்ள சீன துணைத் தூதர் டாங் குயோகாய், இந்திய மற்றும் சீன மக்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும் "2020 ஆம் ஆண்டு எலி ஆண்டு, இது ஒரு பெரிய மாற்றத்தின் ஆண்டாகவும் சீனா, இந்தியா மற்றும் ஆசியாவின் வளர்ச்சிக்கான ஆண்டாகவும் இது இருக்கும் என்று கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்