இலங்கை சுதந்திரத் தினம் குறித்து சீன தலைமை அமைச்சர் வாழ்த்து

மதியழகன் 2020-02-04 11:10:15
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இலங்கையின் 72ஆவது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு, சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் பிப்ரவரி 4ஆம் நாள் இலங்கை தலைமை அமைச்சர் மகிந்த ராஜபக்சேவுக்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பினார்.

இந்த செய்தியில் லீ கெச்சியாங் கூறியதாவது:

இலங்கையின் 72ஆது சுதந்திரத் தினத்தை ஒட்டி, இலங்கை மற்றும் இலங்கை மக்களுக்கு நல் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். சீன-இலங்கை உறவின் வளர்ச்சி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு ஆகியவற்றை நீங்கள் எப்போதும் ஆதரிப்பதற்கு சீனா பாராட்டுத் தெரிவிக்கிறது.

சீனா இலங்கையுடனான உறவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இலங்கையுடன் இணைந்து செயல்பட்டு, பாரம்பரிய நட்புறவை ஆழமாக்கி, பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பை விரிவாக்கி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர்தரமான வளர்ச்சியை மேம்படுத்தி, இரு தரப்புறவை புதிய நிலைக்கு முன்னெடுக்க சீனா விரும்புகிறது.

இலங்கையின் செழிப்புக்கும் இலங்கை மக்களின் மனமகிழ்க்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்