கோதபய ராஜபாக்சேவுக்கு ஷி ச்சின்பிங்கின் வாழ்த்துச் செய்தி

வாணி 2020-02-04 13:23:13
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் 72ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் இலங்கை அரசுத் தலைவர் கோதபய ராஜபாக்சேவுக்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பினார்.

இதில், சீன அரசு, மக்கள் மற்றும் தனது சார்பாக இலங்கை அரசு மற்றும் மக்களுக்கு உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்த ஷி ச்சின்பிங், பண்டைகாலம் தொட்டு சீன-இலங்கை நட்புறவு, ஒன்றுக்கொன்று புரிந்துணர்வு, நம்பிக்கை மற்றும் ஆதரவுடன் வளர்ந்து வருகின்றது என்று குறிப்பிட்டார்.

தற்போது இரு நாட்டுறவு ஒரு புதிய உயர் கட்டத்தில் நுழைந்து புதிய வாய்ப்புகளை எதிர்நோக்குகின்றது. இலங்கையுடனான உறவில் மிகவும் கவனம் செலுத்தி, உங்களுடன் சேர்ந்து இரு நாட்டு அரசியலில் நம்பிக்கையை வலுப்படுத்தி, பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை ஆழமாக்கி, மக்களுக்கிடையிலான பரிமாற்றத்தை அதிகரித்து இரு நாட்டு நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளியுறவின் புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டும் என்று விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் இலங்கையின் செழுமைக்கும் மக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் வாழ்த்துக்கள் என்று ஷி ச்சின்பிங் அனுப்பிய செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்