நோய் பரவல் தடுப்புப் பணியில் சீனாவுக்கு இந்தியக் கலைஞர் ஆதரவு

இலக்கியா 2020-02-11 15:20:42
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவைச் சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், கரோனா வைரஸ் தடுப்பு பற்றி இந்தியக் கடற்கரை ஒன்றில் உருவாக்கிய மணல் சிற்பத்திற்கு உலகச் சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் தெட்ரோஸ் 10ஆம் நாள் இணைய ஊடகத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். தெட்ரோஸ் வெளியிட்ட பதிவில், நோய் பரவி வரும் நிலையில், சீன மக்களுடன் மனம் ஒருமித்து இருப்பதை இச்சிற்பம் எடுத்துக்காட்டுகிறது என்று தெரிவித்தார்.

சுதர்சன் பட்நாயக்,, பல சர்வதேச மணல் சிற்பப் போட்டிகள் மற்றும் உலகளவிலான கலை நிகழ்ச்சிகளில்; இந்திய பிரதிநிதியாக கலந்து கொண்டு, பல முறை முதலிடம் பெற்றுள்ளார். பத்ம ஸ்ரீ பதக்கத்தைப் பெற்ற முதல் மணல் சிற்பக் கலைஞராக, இவர் விளங்குகிரார் என்பது குறிப்பிடத்தக்கது.

3ஆவது புகைப்படம்:The Times of India

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்