சமூக ஊடகங்களிலிருந்து விலகும் மோடி?

இலக்கியா 2020-03-03 10:18:42
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சுட்டுரை, முகநூல் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகங்களிலிருந்தும் விலகுவதைக் கருத்தில் கொண்டுள்ளதாக இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி மார்ச் முதல் நாள் வெளியிட்ட சுட்டுரையில் தெரிவித்தார். ஆனால், எப்போது விலகுவேன் என்ற தேதியை அவர் தெரிவிக்கவில்லை.

இது அவரது சுட்டுரைப் பக்கத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இந்திய இணையப் பயன்பாட்டாளர்கள் பலர் மோடியின் இச்செயலைப் புரிந்து கொள்ள முடியாது என்று தெரிவித்தனர்.

மோடி, உலகளவில் சமூக ஊடகங்களில் மிக அதிகமாக ரசிகர்களைக் கொண்ட தலைவர்களில் ஒருவராவார்.

சுட்டுரை மற்றும் முகநூலில் அவருக்கு 5 கோடியே 33 இலட்சம் பின்பற்றுபவர்களும், இன்ஸ்டிகிராமில் 3 கோடி பின்பற்றுபவர்களும் உள்ளனர். இது, சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்புக்கு இருக்கும் ஆதரவை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்