​​சீனா கரோனா வைரஸைத் தடுக்கும் கட்டுபாட்டு நடவடிக்கை பயன்மிக்கது

தேன்மொழி 2020-03-13 10:46:24
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கொவைட்-19 வைரஸ் பரவலைத் தடுப்பதில் சீனா தெளிவான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது. இவ்வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகின்றன. இந்நிலைமை குறித்து இந்திய புகழ்பெற்ற அறிஞரும் மணிப்பால் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான நாளபத் சீன ஊடகக் குழுமத்தின் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில்,

சீன அரசு துணிச்சலுடன் சரியான வழிமுறை மேற்கொண்டதால், வைரஸ் பரவல் தடுப்பில் தெளிவான முன்னேற்றங்கள் கிடைத்துள்ளன. சீனாவின் வலிமையான நடவடிக்கைகள், முழு உலகிற்கும் பயனுள்ள அனுபவங்களை அளிக்கும் என்று தெரிவித்தார்.

நகரை மூடுதல், தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கட்டுபாட்டு நடவடிக்கைகள் மூலம், சீன அரசு வைரஸ் பெரிய அளவில் பரவுவதை தடுத்துள்ளது. ஆனால், இந்த நடவடிக்கைகள் மனித உரிமைக்குப் புறம்பானது என்று மேலை நாடுகளில் கூறப்படுகிறது. இத்தகைய கருத்தை மறுக்கும் பேராசிரியர் நாளபத், இத்தாலி, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில், முடக்கம், தனிமையாக்கம் போன்ற கட்டுபாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொது மக்களுக்கு வைரஸால் ஏற்படும் பாதிப்பையும் அபாயத்தையும் தடுத்து நிறுத்தும் வகையிலும், வைரஸ் பரவலால் உலகில் ஏற்படும் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியைத் தவிர்க்கும் வகையிலும், இந்தக் கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இது, மனித உரிமையைப் பாதுகாக்கும் வகையிலானது என்று தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்