கரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான இந்தியாவின் நடவடிக்கைகள்

பூங்கோதை 2020-03-20 11:50:07
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி மார்ச் 19ஆம் நாளிரவு, புதிய ரக கரோனா வைரஸ் பரவல் குறித்து, முதல்முறையாக தொலைக்காட்சியின் மூலம் உரை நிகழ்த்தினார். மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அவர் இந்திய மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இவ்வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், சர்வதேச பயணியர் விமானச் சேவையைத் தற்காலிகமாக நிறுத்துவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மார்ச் 22ஆம் நாள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை, அடிப்படை தேவைகள் தவிர, மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் எனவும் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் நிதி அமைச்சர் தலைமையில் பொருளாதாரப் பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு பல்வேறு வழிமுறைகளின் மூலம் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கான உத்தரவாதம் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய சுகாதார அமைப்பு மார்ச் 19ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, அன்று பிற்பகல் 5 மணிக்கு வரை, இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 173ஆகும். அவர்களில் 4 பேர் உயிரிழந்தனர். 20 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்