இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு

பண்டரிநாதன் 2020-03-25 15:49:58
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவில் கொவைட்-19 நோய் பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அதனைக் கட்டுப்படுத்தும் விதம் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. புதன் காலை வரை இந்தியாவில் இந்நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்தது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நோயால் செவ்வாய் இரவு வரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆகும், நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களில் 41 பேர் நலமடைந்தனர்.

செவ்வாய் இரவு தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களுடன் உரையாடிய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தார். இக்காலக் கட்டத்தில் விமானம், தொடர்வண்டி, சாலைப் போக்குவரத்து என அனைத்துச் சேவைகளும் நிறுத்தப்படும். அத்தியாவசியப் பொருள்களான மருந்துக் கடைகள், எரிபொருள் நிலையங்கள், மளிகைக் கடைகள், பால் கடைகள் மற்றும் இணையவழிக் கடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்