மே 3 வரை வெளிநாட்டுப் பயணிகளின் நுழைவு இசைவு ரத்து – இந்தியா

2020-04-19 16:41:43
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வெளிநாட்டுப் பயணிகளின் இந்திய நுழைவு இசைவு ரத்துக் காலத்தை மே 3ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. தூதர்கள், அரசு அதிகாரிகள், ஐநா மற்றும் சர்வதேச அமைப்புகள், வேலைவாய்ப்பு மற்றும் திட்டப் பணி உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்களைத் தவிர மற்ற வெளிநாட்டுப் பயணிகளுக்கு இந்த அறிவிப்புப் பொருந்தும்.

இருப்பினும், வாகனங்கள், விமானங்கள், கப்பல்கள், தொடர்வண்டிகள் உள்ளிட்டவற்றின் மூலம் கொண்டு வரப்படும் அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருள்களின் போக்குவரத்துக்கு இந்த விதிமுறை இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொவைட்-19 நோய் பரவுவதைத் தடுக்கும் விதம் இந்தியாவின் தேசிய ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்