இந்தியாவிலுள்ள சீனர்களுக்கு நோய்த் தடுப்பு குறித்து அறிமுகம் செய்த சீன நிபுணர்

ஜெயா 2020-04-23 14:38:45
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

22ஆம் நாள் இந்தியாவுக்கான சீனத் தூதர் சுன் வெய்துங்கின் அழைப்பின் பேரில், ஷாங்காய் மாநகரின் கொவைட்-19 நோய்த் தடுப்பு மற்றும் மருத்துவச் சிகிச்சைக்கான நிபுணர் குழுவின் தலைவரும் பேராசிரியருமான சாங் வென் ஹோங், செய்தி ஊடகத்தின் மூலம், இந்தியாவிலுள்ள சீன முதலீட்டுத் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், சீனர்கள், சீன மாணவர்கள் ஆகியோருடன் கொவைட்-19 நோய்த் தடுப்பு குறித்துப் பரிமாற்றம் மேற்கொண்டார்.


இந்தியாவில் நோய்ப் பரவல் நிலவரம், அறிகுறியில்லாத நோயாளிகள் நோய் தடுப்புக்கான பாதிப்பு, பள்ளிகள், தொழில் நிறுவனங்கள் முதலிய இடங்களில் மேற்கொள்ள வேண்டிய நோய்த் தடுப்பு வழிமுறைகள் முதலியவை பற்றிய கேள்விகளுக்கு அவர் விரிவான பதிலளித்தார்.


இந்த உரையாடல் மூலம் நோய்த் தடுப்பு சார்ந்து பல்வேறு புதிய செய்திகளை அறிந்து கொண்டதாகவும், அதனால் நோய்த் தடுப்பில் நம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும் இந்தியாவிலுள்ள சீனர்களும் இணையப் பயன்பாட்டாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்