இலங்கையில் கடற்கரையில் நெகிழி மாசு குறைவு

பண்டரிநாதன் 2020-04-23 19:40:37
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இலங்கையின் கடற்கரை மற்றும் கடற்பரப்பில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், முதல் 4 மாதங்களில் மட்டும் 40 விழுக்காடு அளவு நெகிழி மாசு குறைந்துள்ளது என்று இலங்கை கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையப் பொதுமேலாளர் டெர்னி பிரதீப் குமாரா புதன்கிழமை தெரிவித்தார்.

நெகிழி மாசு குறைவுக்குப் பல காரணங்கள் உண்டு, அதில் கடந்த மாதத்திலிருந்து அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவும் ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேசத் தர நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி கடந்த ஆண்டில், உலக அளவில் கடற்பரப்பை மாசுபடுத்துவதில் முதல் 5 இடங்களுக்குள் இலங்கை இருந்தது. ஆண்டுதோறும் இலங்கைக் கடற்பரப்பில் 15.9 லட்சம் டன் நெகிழி மாசுகள் சேர்வதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்