இணைய வழியில் 6ஆவது சர்வதேச யோகா தினம்

பண்டரிநாதன் 2020-06-22 11:08:13
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

(படம்:யோகா)

6ஆவது சர்வதேச யோகா தினத்தையொட்டி நமிபீயாவில் உள்ள இந்திய தூதரகம் இணையம் வழியாக ஞாயிற்றுக்கிழமை சிறப்பு யோகா வகுப்பை நடத்தியது. “உடல்நலனுக்கு யோகா – வீட்டிலேயே யோகா” என்ற தலைப்பில் இக்கொண்டாட்டம் நடைபெற்றது.

நமிபீயாவுக்கான இந்தியத் தூதர் பிரஷாந்த் அகர்வால் கூறுகையில், கொள்ளை நோய் போன்ற அறைகூவல் நிறைந்த தருணங்களை எதிர்கொள்வதற்கு யோகாவும் ஒரு வழிமுறையாக இருக்கும் என்று தெரிவித்தார்.

தூதரகத்தில் உள்ள இந்திய கலாசாரம் மற்றும் யோகா பிரிவின் நடத்துநர் நிகிலா ஹிரேமத் கூறுகையில், அனைவருக்கும் பொருந்தும் வகையிலான ஆசனங்களை மையமாக வைத்து இவ்வகுப்பு நடத்தப்பட்டது என்றார். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்