சீன - இந்திய எல்லை மோதல் பற்றி இந்தியாவுக்கான சீனத்தூதரின் கருத்து

பூங்கோதை 2020-06-26 14:28:24
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவுக்கான சீனத் தூதர் சுங் வெய்தொங், ஜுன் 25ஆம் நாள், சீன-இந்திய எல்லை பகுதியில் நிகழ்ந்த மோதல் குறித்து பி.டி.ஐ. என்னும் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்தார்.

அண்மையில், கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடும் மோதலுக்குச் சீனா காரணம் அல்ல என்று குறிப்பிட்ட அவர் அது தொடர்பாக நான்கு முக்கியக் கருத்துகளையும் தெரிவித்துள்ளார். முதலாவதாக சீன - இந்திய எல்லையில் உள்ள உண்மைக் கட்டுப்பாட்டுக்கோட்டை ஒட்டியுள்ள  சீனப் பகுதியில் நடந்த இம்மோதலில் இந்தியப் படையே முதலில் எல்லையைத் தாண்டியது. இரண்டாவதாக, இப்பிரச்சினையில் இந்தியா இரு நாடுகளுக்கிடையே எட்டப்பட்ட பொதுக் கருத்தை மீறி, பிரதேச நிலைமையைத் தீவிரமாக்கியது. மூன்றாவதாக, இந்தியப் படையே முதலில் சீனப் படை மீது தாக்குதல் நடத்தியது. நான்காவதாக, இரு நாடுகளும் உருவாக்கிய பல உடன்படிக்கைகளை இந்தியா முதலில் அத்துமீறியது என்பனவே அவை.

இந்நிலையில், இந்தியா முழு அளவிலான புலனாய்வை மேற்கொண்டு, இந்நிகழ்வுக்குக் காரணமானவருக்குத் தண்டனை கொடுத்து, முன்னணிப் படையைக் கண்டிப்பான முறையில் கட்டுப்படுத்த வேண்டும் என சீனா கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது, இரு நாடுகளும் இராணுவ மற்றும் தூதாண்மை வழிமுறையின் மூலம் தொடர்பு கொண்டு வருவதாகவும், கருத்து வேற்றுமைகளை உகந்த முறையில் கட்டுப்படுத்தும் விருப்பமும் திறமையும் இரு தரப்புகளுக்கு உண்டு என்றும், தற்போது, சீன-இந்திய எல்லை நிலைமை, கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் சுங்வெய்தொங் தெரிவித்தார். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்