இந்தியாவில் இடியுடன் கூடிய மழைக்கு 107 பேர் உயிரிழப்பு

சிவகாமி 2020-06-26 16:22:56
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவின் உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் 25ஆம் நாள் பெய்த இடியுடன் கூடிய மழையில் குறைந்தது 107 பேர் உயிரிழந்துள்ளதாக புதுதில்லியிலிருந்து வெளியான செய்தியிலிருந்து தெரியவந்துள்ளது. இடியுடன் கூடிய மழையால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கும் தலா 4 இலட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என்று இவ்விரண்டு மாநிலங்களின் அரசுகளும் அறிவித்துள்ளன. பீகார் மாநில அரசு உயிரிழந்தவர்களுக்கு மட்டுமின்றி கால்நடைகளை இழந்தவர்களுக்கும் பொருளாதார உதவிகளை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

தற்போது, தெற்காசிய பிரதேசங்களில் மழைக்காலம் தொடங்கியுள்ளது. இந்தியா, நேபாளம், வங்காளதேசம் முதலிய நாடுகளில் அண்மைக் காலமாக இடியுடன் கூடிய மழையால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்