சீன செயலிகளின் பயன்பாட்டுக்கு இந்தியா தடை விதித்திருப்பது குறித்து சீனத் தூதரகம் அறிக்கை

2020-07-01 11:53:38
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவில் வீசாட் உள்ளிட்ட சீன நிறுவனங்களின் 59 செயலிகளுக்கு தடை விதிப்பதாக, இந்தியா அறிவித்துள்ளது. இது குறித்து, இந்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் 29ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் இந்திய இறையாண்மை, தேசியப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கைப் பாதிப்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சில சீன செயலிகள் மீது இந்தியா தடை நடவடிக்கை மேற்கொள்வது, உலக வர்த்தக அமைப்பின் தொடர்புடைய விதிக்கும், சர்வதேச வர்த்தகம் மற்றும் மின்னணு வணிக வளர்ச்சிப் போக்கிற்கும் புறம்பானது. இந்திய நுகர்வோரின் நலனுக்கும், சந்தை போட்டிக்கும் இது துணை புரியாது என்று இந்தியாவிலுள்ள சீனத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சீன-இந்திய பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பில் ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறுவது என்ற சாராம்சத்தை இந்தியா புரிந்து கொண்டு, பாகுபாட்டுச் செயல்களை மாற்றி, இரு தரப்பின் அடிப்படை நலன்களையும், சீன-இந்திய உறவின் ஒட்டுமொத்த நிலையையும் கருத்தில் கொண்டு, இரு தரப்பு பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு போக்கினைப் பேணிகாக்க வேண்டும் என சீனா விரும்புவதாக இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்