சீன-தெற்காசிய அரசு சாரா நட்பு அமைப்புகளின் பொறுப்பாளர்களுக்கான காணொலிக் கூட்டம்

ஜெயா 2020-07-14 14:49:27
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஒற்றுமையாக கரோனா வைரஸுடன் போராட்டமிட்டு, ஒத்துழைப்புடன் கூட்டு வளர்ச்சி பெறுவது என்ற தலைப்பில், சீன-தெற்காசிய அரசு சாரா நட்பு அமைப்புகளின் பொறுப்பாளர்களுக்கான காணொலிக் கூட்டம் 13ஆம் நாள் தொடங்கியது.

சீன மக்கள் வெளிநாட்டு நட்புச் சங்கம், தெற்காசிய-சீன நட்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பு, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இந்தியா, மாலதீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை முதலிய தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த அரசு சாரா நட்பு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர். கரோனா வைரஸுக்கு எதிராக கூட்டாகப் போராடுவது, சீன-தெற்காசிய நாடுகளின் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை முன்னேற்றுவது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஆக்கப்பணி முதலியவை பற்றி அவர்கள் நட்பார்ந்த பேச்சுவார்த்தை மற்றும் பரிமாற்றம் மேற்கொண்டு, பரந்த ஒத்த கருத்துக்களை எட்டியுள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்