சீன-இந்திய நட்புறவே பொது மக்களின் விருப்பம்

இலக்கியா 2020-07-16 17:51:46
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகள், பிரதேச அமைதி மற்றும் செழுமைக்குப் பாடுபட்டு, ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று தெற்காசிய நட்பு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் அண்மையில் தெரிவித்தனர்.

இந்திய-சீன நட்புச் சங்கத்தின் மஹராஷ்டிர மாநிலக் கிளை அமைப்பின் தலைவர் ஜோஜ் ஃபெர்னான்டஸ் கூறுகையில், சீனாவுக்கும் தெற்காசிய நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு, தத்தமது செழுமை, ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் அமைதிக்கு நன்மை விளைவிக்கும் என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான்-சீன நட்புச் சங்கத்தின் தலைமைச் செயலாளர் ஃபார்வா சாஃபர் அம்மையார் குறிப்பிடுகையில், நோய் பரவி வரும் இக்கட்டான காலத்தில், நோய் பரவலைக் கூட்டாகத் தடுப்பது, சீன-தெற்காசிய நாடுகளின் நட்பை மேலும் வளர்ப்பதற்கான சிறந்த வாய்ப்பாகும் என்று கூறினார்.

மேலும், சீன மக்கள் வெளிநாட்டு நட்புச் சங்கத் தலைவர் லின் சுங் தியேன் கூறுகையில், சீனா, இந்தியா ஆகிய நாடுகள், பரந்தளவில் பொது நன்மைகள் கொண்டு வருகின்றன. இரு நாடுகளின் அமைதியான சகவாழ்வு அதிமுக்கியமானது என்று குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்