அசாம் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு - 54 இலட்சம் பேர் பாதிப்பு

ஜெயா 2020-07-20 09:10:37
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இவ்வாண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மலை நிலச்சரிவால் 110 பேர் உயிரிழந்துள்ளனர். 54 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இம்மாநிலத்தின் இயற்கைப் பேரிடர் பணியகம் 19ஆம் நாள் தெரிவித்துள்ளது. சமீபத்திய வெள்ளப்பெருக்கால் தற்போது வரை 2400 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 2.4 இலட்சம் ஹெக்டருக்கும் மேலான பயிர்கள் சேதமடைந்துள்ளன. உள்ளூர் அரசு 649 தற்காலிக முகாம்களை அமைத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு உதவி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்