மந்தமான நிலையில் இந்தியாவின் தொழில் துறை

பூங்கோதை 2020-07-20 10:26:28
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்திய வணிகம் மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு ஜூலை 19ஆம் நாள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இந்தியாவில் 300க்கும் மேலான உற்பத்தி நிறுவனங்களின் கருத்துக்கணிப்பின்படி, வாகனத் துறை கரோனா வைரஸ் பரவலால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தோல்பொருட்கள், காலணி, மின்னணு, மின்சார மற்றும் நெசவு இயந்திரம் உள்ளிட்ட துறைகளும் மந்தமான நிலையில் உள்ளது. தவிர, வாகனம், சிமெண்ட் மற்றும் பீங்கான் பொருள், வேதியியல், ரசாயன உரம் மற்றும் மருந்து தயாரிப்பு உள்ளிட்ட 12 துறைகளைச் சேர்ந்த தயாரிப்புத் தொழில்களின் உற்பத்தி நிலைமை மீது மேற்கொண்ட மதிப்பீட்டின்படி, இவ்வாண்டின் முதல் 3 திங்கள்களில் தயாரிப்பு சாதனங்களின் பயன்பாட்டு விகிதம் 61.5 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

மேலும், கரோனா வைரஸின் பாதிப்பால் பல்வேறு தொழில் துறைகளும் பணியாளர்களின் பற்றாக்குறையைச் சந்தித்துள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்