நோய் தடுப்பில் சீன-இந்திய ஒத்துழைப்பு

வாணி 2020-09-06 18:44:49
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அண்மையில் இந்திய கொல்கத்தாவிலுள்ள சீனத் துணை நிலை தூதர் சா லியோ, கரோனா நோய் தடுப்பில் இந்திய தரப்புடன் மேற்கொண்டு வரும் ஒத்துழைப்பு பற்றி சீன ஊடகக் குழுமத்தின் செய்தியாளருக்குப் பேட்டியளித்தார். உள்ளூர் அரசுடன் சிறப்பாக ஒத்துழைத்து முன்னேற்றங்களைப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்திய செய்தியாளருக்குப் பேட்டி அளித்தார்

இந்திய செய்தியாளருக்குப் பேட்டி அளித்தார்

அவர் மேலும் கூறுகையில், 4 துறைகளில் இந்த ஒத்துழைப்பு பற்றி விவரித்தார். ஒன்று, உள்ளூர் அதிகாரிகளுடன் நெருக்கமான தொடர்பு மேற்கொண்டு சீனாவில் நோய் தடுப்பு நிலைமை பற்றி அவர்களின் கேள்விகளுக்கு இயன்ற அளவில் பதிலளித்து வருகின்றோம். இரண்டாவதாக, நோய் தடுப்புப் பொருட்களின் உற்பத்தி மற்றும் மேலாண்மை பற்றி ஆலோசனைகளை வழங்கி சீனாவிலிருந்து மருத்துவப் பொருட்களை வாங்க வசதி அளித்து வருகின்றோம். மூன்றாவதாக, நோய் தடுப்பில் சீனாவின் வெற்றிகரமான அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டு வருகின்றோம். நான்காவதாக, வழமையான பரிமாற்றங்களை மேற்கொண்டு வருகின்றோம் என்று சா லியோ குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்