இந்தியாவில் சுரங்க இருப்புப்பாதை மீண்டும் இயக்கம்

பூங்கோதை 2020-09-08 16:23:25
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உலகச் சுகாதார அமைப்பு வெளியிட்ட புதிய புள்ளிவிவரங்களின்படி, செப்டம்பர் 7ஆம் நாள் வரை, உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6ஆம் நாள் இருந்ததை விட 2 லட்சத்து 65 ஆயிரத்து 818 அதிகரித்து, மொத்தம் 2 கோடியே 70 லட்சத்து 32 ஆயிரத்து 617 எட்டியுள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6ஆம் நாள் இருந்ததை விட 4820 அதிகரித்து, மொத்தம் 88 லட்சத்து 1464 எட்டியுள்ளது.

அண்மையில் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது என்ற போதிலும், புது தில்லியில் சுரங்க இருப்புப்பாதை 7ஆம் நாள் மீண்டும் இயக்கத்துக்கு வந்துள்ளது. மேலும், 7ஆம் நாள் தொடங்கி, இந்தியாவில் குறைந்தது 12 சுரங்க இருப்புப்பாதைகள் மீண்டும் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்