இந்தியாவில் 2021 தொடக்கத்தில் கொவைட்-19 தடுப்பு மருந்து – ஹர்ஷ்

2020-09-14 15:40:09
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவில் கொவைட்-19 தொற்றுநோய்க்கான தடுப்பு மருந்து அடுத்த ஆண்டின் முதல் காலாண்டுக்குள் வந்து விடும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகத்தில் “ஞாயிறு உரையாடல்” என்ற நிகழ்ச்சியில் அவர் மேலும் கூறுகையில், “தடுப்பு மருந்து சோதனை நடைபெற்று வரும் அதே வேளையில், அதிக மக்களுக்குத் தேவையான மருந்து உற்பத்தியை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தடுப்பு மருந்தின் பாதுகாப்பு, விலை, குளிர்பதன வசதி, உற்பத்தித் தேதி ஆகியன குறித்து தீவிரமாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,” என்றார்.

மேலும், தடுப்பு மருந்து மீது மக்கள் சந்தேகம் கொண்டால் தன்னார்வலராக முதலில் தானே அதனை எடுத்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார். தற்சமயம், நாட்டில் பல்வேறு தடுப்பு மருந்துகளின் சோதனை நடைபெற்று வருகின்றது. எது முதலில் பயன்பாட்டுக்கு வரும் என்பதை கணிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக, பிரிட்டனின் அஸ்ட்ரா செனிகா நிறுவனத்தின் தடுப்பு மருந்து சோதனையில் பக்க விளைவு எழுந்ததைத் தொடர்ந்து, 4 நாடுகளில் மேற்கொள்ள இருந்த மூன்றாவது கட்ட சோதனையை அந்நிறுவனம் நிறுத்தியது. தொடர்ந்து, ‘இந்திய சிரம் நிறுவனம்’ தனது மூன்றாவது கட்ட சோதனையை நிறுத்துவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில், கரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்து ஹர்ஷ் வர்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்