இந்தியாவில் 50 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்குக் கரோனா பாதிப்பு

2020-09-17 10:56:40
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியச் சுகாதார அமைச்சகம் 16ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, அன்று வரை இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 இலட்சத்து, 20 ஆயிரத்து, 359 ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 90 ஆயிரத்து 123 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இந்துஸ்டைம்ஸ் நாளேடு அதே நாள் வெளியிட்ட கட்டுரை ஒன்றில், கடந்த ஒரு வாரத்தில் நோய் தொற்று எண்ணிக்கை நாளொன்றுக்குச் சராசரியாக 93 ஆயிரத்தைத் தாண்டி, கடந்த திங்களில் இருந்ததை விட 50.7 விழுக்காடு அதிகரித்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டது.

அண்மைக்காலமாக இந்தியாவில் கட்டங்கட்டமாகத் தடை நடவடிக்கைகள் நீக்கப்பட்ட நிலையில், மாநகரங்கள் பலவற்றில் நோய் தொற்றின் எண்ணிக்கை மீண்டும் உயர்ந்து வருகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்