இந்தியாவுடன் சேர்ந்து மோதலைத் தவிர்த்து கூட்டு வெற்றியை நாட விருப்பம்:சீனா

வாணி 2020-09-17 11:58:06
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இவ்வாண்டி ஏப்ரல் முதல் சீன-இந்திய எல்லைப் பகுதியில் மோதல்கள் மீண்டும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, செப்டம்பர் 7ஆம் நாள் இந்தியப் படையினர் இப்பகுதியில் துப்பாக்கியைப் பயன்படுத்தியது கடந்த பல பத்து ஆண்டுகளில் நிகழாத ஒன்றாகும். இது சர்வதேசச் சமூகத்திடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப்புக் கூட்டத்தின் போது, இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாஸ்கோவில் சந்திப்பு நடத்தி எல்லைப் பிரச்சினை பற்றிய 5 கருத்தொற்றுமைகளை எட்டியிருப்பது பொதுமக்களால் பெரிதும் வரவேற்கப்படுகின்றது.

அண்டை நாடுகளான சீனாவும் இந்தியாவும் பெரிய வளரும் நாடுகளாகும். பல ஆண்டுகளாக இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளி நாடுகளில் ஒன்றாகச் சீனா திகழ்கின்றது. அலிபாபா, சியௌமி, விவோ உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேலான சீனத் தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து 2 இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. சீனாவில் இந்தியாவின் யோகா, பாலிவுட் திரைப்படங்கள் முதலியவை பெரிதும் வரவேற்கப்படுகின்றன.

சீன - இந்திய உறவு என்பது 250 கோடி மக்களின் நலன்களுடன் தொடர்புடையது. அதோடு மட்டுமல்லாமல், பிரதேச மற்றும் உலக அமைதியுடனும் தொடர்புடையது.

தற்போதைய கரோனா தொற்று பரவல், சீன - அமெரிக்க உறவு மற்றும் பன்னாட்டு உறவில் நிகழ்ந்து வரும் மாற்றம், உள்நாட்டு நோய்ப் பரவல் தடுப்பில் காணப்படும் பயன் குறைவான தன்மை முதலியவைகளால் இந்தியாவிலுள்ள சில அரசியல்வாதிகள் சீனாவைத் தவறாக மதிப்பிட வேண்டாம். அமெரிக்காவைப் பின்பற்றி சீனாவை மட்டுப்படுத்த முயல்வதும் தவறான எண்ணமாகும்.

இரு பெரும் நாடுகளுக்கிடையே கருத்துவேற்றுமை நிலவுவது இயல்பே. ஆனால், இவற்றை வேண்டுமென்றே விரிவாக்குவது ஆபத்தானது. உலகளவில் பெரும் மாற்றங்கள் காணப்படும் இத்தருணத்தில், சீனாவும் இந்தியாவும் மேலதிக நல்லெணத்தோடு சிறந்த உறவை உருவாக்க வேண்டும்.

இந்தியாவுக்கான சீனாவின் கொள்கை நிலையானதும் நம்பகமானதுமாகும். எனவே, உள்நாட்டுத் தீவிர தேசியவாதம், வெளிநாடுகளிலிருந்து வரும் நிர்பந்தம் மற்றும் தலையீடு ஆகியவற்றை இந்தியா உரிய முறையில் சமாளிக்க வேண்டும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்