நாட்டைக் கட்டியமைப்பதில் பெரும் சாதனைகளைப் பெற வேண்டும்:ராஜபக்ச

தேன்மொழி 2020-10-10 20:57:13
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அக்டோபர் 9-ஆம் நாள் இலங்கை அரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் வெளிவிவகார அலுலவகத்தின் இயக்குநருமான யாங் ட்சே ட்சியைச் சந்தித்து உரையாட்டியபோது அந்நாட்டு அரசுத் தலைவர் கோத்தபய ராஜபக்சவின் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தற்போது இரு நாட்டு உறவுக்கு மனநிறைவு தெரிவித்த ராஜபக்ச குறிப்பிடுகையில், சீனா இலங்கையின் நீண்டகால நண்பராகத் திகழ்கின்றது என்று தெரிவித்தார்.

மேலும், இலங்கையின் அடிப்படை வசதிகள் கட்டுமானத்துக்கு சீனா மாபெரும் பங்காற்றியுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டப்பணி, இலங்கையைக் கட்டுப்படுத்த சீனா உருவாக்கிய கடன் சூழ்ச்சியாக அமையும் என சில புவியியல் அரசியல்வாதிகள் தீய நோக்கத்துடன் கருதுகின்றனர். இது உண்மைக்குப் புறம்பானது. இத்திட்டப்பணியின் வளர்ச்சி மூலம், அவர்களின் தவறான கருத்தை மறுத்துறைப்போம். முதலாவதாக, அம்பாந்தோட்டை பிரதேசத்தில் துறைமுகத்தைக் கட்டியமைக்க வேண்டும் என்ற ஆலோசனை இலங்கையினால் முதன்முறையாக முன்வைக்கப்பட்டதாகும். சீனா அல்ல. இலங்கையின் கோரிக்கைக்கு இணங்க, சீனத் தரப்பு நிதி மற்றும் கட்டுமான ஆதரவு வழங்கியது. வருமானம் மற்றும் வேலை வாய்ப்பு அதிகரிப்பு முதலிய துறைகளில், இத்திட்டப்பணி மாபெரும் உள்ளார்ந்த ஆற்றல் உள்ளது. இது, பயனுள்ள முறையில் இலங்கை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்று நம்புகின்றோம்.

அரசுத் தலைவர் பதவி ஏற்பதற்கு முன், நான் 13முறைகள் சீனாவில் பயணம் மேற்கொண்டிருந்தேன். சீனா, குறிப்பாக அந்நாட்டின் பரந்துபட்ட கிராமப்புறங்களில் பெற்றுள்ள மாபெரும் வளர்ச்சி சாதனைகளை நேரில் கண்கூடாகக் கண்டேன் என்று அவர் தெரிவித்தார். இலங்கை, குறிப்பாக தொலைத்தூரத்தில் உள்ள பிரதேசங்களில், சீனா மாதிரி போன்ற சாதனைகள் பெறப்பட்டு, இலங்கை மக்கள் குறிப்பாக வறிய மக்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்துவது ஆகியவை, தனது ஆட்சியின் இலக்காகும் என்றும் ராஜபக்ச தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்