இந்தியாவுக்கான சீனத் தூதரகத்தில் மருத்துவர் கொட்னீசின் பிறந்தநாள் கருத்தரங்கு

ஜெயா 2020-10-15 15:15:09
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவுக்கான சீனத் தூதரகமும், இந்தியாவிலுள்ள மருத்துவர் கொட்னீஸ் அக்குபங்சர் நலவாழ்வு மற்றும் கல்வி மையமும் இணைந்து மருத்துவர் துவார்கநாத் கொட்னீசின் 110ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் காணொலிக் கருத்தரங்கு ஒன்றை நடத்தின. இதில், சீனத் தூதர் சுன்வெய்தொங் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். இக்கருத்தரங்கில் சீனா மற்றும் இந்தியாவின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பலரும் இணைய வழியில் கலந்து கொண்டனர்.

சுன்வெய்தொங் தனது உரையில், மருத்துவர் கொட்னீஸ் இந்திய மக்களின் தலைசிறந்த பிரதிநிதி என்றும் அவர், சீன-இந்திய நட்புக்கான முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் என்றும் புகழ்மாலை சூட்டினார்.

இதில் கலந்து கொண்ட விருந்தினர்கள் கூறுகையில், மருத்துவர் கொட்னீஸ் அமைதிக்காக தனது இன்னுயிரைத் தியாகம் செய்தவர் என்றும், அவரது எழுச்சி, சீன - இந்திய இரு தரப்புறவின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தெரிவித்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்