கோவிட்-19 ஆய்வு மற்றும் தடுப்பூசி பற்றிய கூட்டத்தில் மோடி பங்கெடுப்பு

வாணி 2020-10-16 10:08:11
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கோவிட்-19 தொற்றுநோய் பரவல் தடுப்பு, தடுப்பூசி விநியோகம் ஆகியவை தொடர்பான ஆய்வுக் கூட்டத்துக்கு இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில், ரத்த ஊநீர் சோதனைகளை மேற்கொள்ளும் அளவை அதிகரிக்க வேண்டும் என்றும் வழக்கமாகவும், விரைவாகவும், மலிவாகவும் சோதனை செய்வதற்கான வசதி அனைவருக்கும் விரைவில் கிடைக்க வேண்டும் என்றும் மோடி கூறியதாகத் தலைமை அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இக்கூட்டத்தில் தடுப்பூசி ஆய்விற்கு அரசு முழு ஆதரவு அளித்து வருவதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

புள்ளிவிவரங்களின்படி, வியாழக்கிழமை வரை, இந்தியாவில் மொத்தமாக 73 இலட்சத்து 7 ஆயிரத்து 97 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நோயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 266 ஆகும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்