பிரிக்ஸ் வணிக மன்றத்தின் துவக்க விழா

2017-09-03 16:57:44
Comment
பகிர்க
பகிர்க Close
Messenger Messenger Pinterest LinkedIn
16:57

பிரிக்ஸ் நாடுகளுக்கு 2ஆவது பத்தாண்டுக்காலம் தொடங்குகிறது. சர்வதேச சமூகத்துடன் இணைந்து கூட்டு முயற்சிகளை மேற்கொண்டு, பிரிக்ஸ் ஒத்துழைப்பு சாதனைகள் மூலம் ஐந்து நாடுகளின் பொது மக்களுக்கு  நன்மைகளை கொண்டு வருகின்றோம். உலக அமைதி மற்றும் வளர்ச்சி நலன்கள், பல்வேறு நாடுகளின் மக்களுக்கு நன்மையை ஏற்படுத்த பாடுபடுகின்றோம் என்று ஷிச்சின்பிங் சொற்பொழிவின் இறுதியில் தெரிவித்தார்.

16:51

ஷிச்சின்பீங்கின் சொற்பொழிவில் பேசுகையில், பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பு முறை இடைவிடாமல் வளர்ந்து வரும் 10 ஆண்டுகாலம், சீனா சீர்திருத்தத்தையும் வெளிநாட்டுத் திறைப்பையும் முழுமையாக விரிவாக்கி, பொருளாதார சமூகம் வேகமாக வளர்ச்சியடைந்த காலமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சீனாவின் மொத்த பொருளாதார அளவு 239 விழுக்காடாக அதிகரித்துள்ளது. சீர்திருத்த்த்தை பன்முகங்களிலும் ஆழமாக்கும் பாதை சரியானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

16:42

ஒரு மண்டலம் ஒரு பாதை என்ற முன்மொழிவு பிரதேச அரசியல் கருவி அல்ல, மாறாக பயனுள்ள ஒத்துழைப்பு மேடையாக விளங்கி வருகிறது. வெளிநாட்டுக்கு உதவித்திட்டம் அல்ல, கூட்டு வளர்ச்சித் திட்டமாகும். ஒரு மண்டலம் ஒரு பாதை என்ற முன்மொழிவை கூட்டாக நிறைவேற்றுவது, பல்வேறு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு மற்றும் கூட்டு நலன் பெறுவதற்கு புதிய மேடையை உருவாக்கி வழங்க உதவும். 2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சி திட்டப்பணியை நிறைவேற்றுவதற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று ஷிச்சின்பீங் கூறினார்.

16:41

உலகளாவிய செல்வாக்கு வாய்ந்த ஒத்துழைப்பு மேடையாக, பிரிக்ஸ் திகழ்கிறது. பிரிக்ஸ் ஒத்துழைப்பின் முக்கியத்துவம், பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளின் வரம்பை தாண்டியுள்ளது. புதிய வளரும் சந்தைகள் மற்றும் வளரும் நாடுகளின் எதிர்பார்ப்பை அது ஏற்கிறது.

பிரிக்ஸ் பிளஸ் என்ற ஒத்துழைப்பு மாதிரியை முன்னெடுக்கும் வகையில், மேலதிக புதிய வளரும் சந்தைகளும் வளரும் நாடுகளும் இந்த ஒத்துழைப்பில் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

16:38

வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் வளர்ச்சி, மற்ற நாடுகளின் வளர்ச்சிக்குப் பாதிப்பு ஏற்படுத்தாது. உலகப்பொருளாதார கேக் மேலும் பெரிதாக மாற முயற்சி செய்ய வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் சியாமென் பிரிக்ஸ் நாடுகளின் வணிக மன்றக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய போது கூறினார். 

16:20

உலக அமைதியைப் பேணிக்காவும்,  சர்வதேச பாதுகாப்பு ஒழுங்குமுறையை உருவாக்கவும், பிரிக்ஸ் நாடுகள் பாடுபட்டு வருகின்றன. பொது, பன்முகம், ஒத்துழைப்பு, தொடர்ச்சி ஆகிய தன்மைகள் வாய்ந்த பாதுகாப்புக் கருத்துகளை ஆரம்பிக்க வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் தனது சொற்பொழிவில் தெரிவித்தார்.

15:55

2017ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாடுகளின் வணிக மன்றக்கூட்டம் 3ஆம் நாள் மாலை சியாமென் நகரில் துவங்கியது. சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பீங் துவக்க விழாவில் சொற்பொழிவு ஆற்றினார். பிரிக்ஸ் ஒத்துழைப்பு முக்கியமான காலகட்டத்தில் நுழைந்துள்ளது. வெற்றிகரமான அனுபவங்களைத் தொகுத்து எதிர்காலத்தின் ஒத்துழைப்பைத் திட்டமிட்டு, பிரிக்ஸ் ஒத்துழைப்பின் இரண்டாவது தங்கமான பத்தாண்டுக் காலத்தை உருவாக்க கூட்டாக பாடுபட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

15:37

2017ஆம் ஆண்டு பிரிக்ஸ் வணிக மன்றக் கூட்டம் மாலை 3:30 மணிக்கு சியாமென் நகரில் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இதில் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்துகிறார்.

15:34

பிரிக்ஸ் வணிக மன்றத்தில் கலந்து கொண்டுள்ள விருந்தினர்களும் பிரதிநிதிகளும் கூட்டம் மையத்துக்குள் அடுத்தடுத்து நுழைந்து கொண்டிருக்கின்றனர்.


15:07

2017ஆம் ஆண்டு பிரிக்ஸ் வணிக மன்றத்தின் துவக்க விழா இன்று மாலை 3:30 மணிக்கு சீனாவின் சியாமென் நகரில் துவங்குகிறது. 

15:04

வர்த்தகம் மற்றும் முதலீடு, நாணய ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி, ஒன்றிணைப்பு மற்றும் தொடர்பு, நீல நிறப் பொருளாதாரம் ஆகியவற்றில் நடப்பு மன்றக்கூட்டம் முக்கியமாக கருத்து செலுத்தும். 25 நாடுகளைச் சேர்ந்த 1200 பிரதிநிதிகள் இதில் கலந்துகொள்ள உள்ளனர். அவர்களில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களைத் தவிர, ஐ.நா தொழிற்துறை வளர்ச்சி அமைப்பு, பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்களும் அடங்குவர்.

14:39

2017ஆம் ஆண்டு பிரிக்ஸ் வணிக மன்றத்தின் துவக்க விழா 3ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சீனாவின் ஃபூ ஜியன் மாநிலத்தின் சியாமென் நகரில் நடைபெறுகிறது.  சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இதில் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்துகிறார்.

இது வரை, பிரிக்ஸ் வளர்ச்சி வரலாற்றில் மிக பெரிய அளவிலான வணிக மன்றக் கூட்டம் நடப்புக் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்