நேரடி ஒளிப்பரப்பு:சீன அரசுத் தலைவரின் செய்தியாளர் சந்திப்பு

2017-09-05 15:06:20
Comment
பகிர்க
பகிர்க Close
Messenger Messenger Pinterest LinkedIn
15:06

அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்கா பிரிக்ஸ் நாடுகள் அமைப்பின் தலைவர் நாடாக பதவி வகித்து, ஜோகன்னெஸ்பெர்க்கில் பிரிக்ஸ் நாடுகள் தலைவர்களின் 10ஆவது சந்திப்பை நடத்தவுள்ளது. சீனா, பல்வேறு தரப்புகளுடன் இணைந்து தென்னாப்பிரிக்காவுக்கு ஆதரவு அளித்து, பிரிக்ஸ் ஒத்துழைப்பின் தொடர்ச்சியான வளர்ச்சியை விரைவுபடுத்த பாடுபடும் என்று ஷிச்சின்பீங் தெரிவித்தார். 

14:30

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் 5ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், சீனா நடத்திய வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் பேச்சுவார்த்தையில், தெற்கு-தெற்கு ஒத்துழைப்பையும் உலகளவில் வளர்ச்சி ஒத்துழைப்பையும் ஆழமாக்கும் சமிக்கை விடப்பட்டுள்ளது. தெற்கு-தெற்கு ஒத்துழைப்பை ஆழமாக்கி, பிரிக்ஸ் பிளஸ் முறைமையையும் பரந்தளவில் கூட்டாளியுறவையும் நிறுவி, திறப்பான பலத்தரப்பட்ட வளர்ச்சி கூட்டாளி வலைப்பின்னலை உருவாக்கி, தொடரவல்ல வளர்ச்சி வழியைக் கண்டறிந்து பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

14:30

அரசியல் பாதுகாப்பான ஒத்துழைப்பை ஆழமாக்கி, ஒன்றுக்கொன்று நெடுநோக்கு நம்பிக்கையை அதிகரிப்பது, பிரிக்ஸ் நாடுகளின் பொது நலன்களுக்கும், சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புக்கும் பொருந்தியது என்று பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் ஒருமனதாக கருத்து தெரிவித்தனர். மேலும், அரசியல் பாதுகாப்பான ஒத்துழைப்பின் நல்ல வளர்ச்சிப் போக்கை தொடர்ந்து முன்னேற்றி, உலக அமைதி மற்றும் நிலைப்புத் தன்மைக்கு மேலதிக பங்காற்ற வேண்டும் என்று ஷி ச்சின்பிங் 5ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். 

14:29

இவ்வாண்டு பிரிக்ஸ் அமைப்பு முறை புதிய முன்னேற்றங்களைப் பெற்றுள்ளது. வெளியுறவு அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை, ஐ.நாவுக்கான நிரந்தர பிரதிநிதிகளின் கலந்தாய்வு ஆகிய அமைப்பு முறைகளை பிரிக்ஸ் நாடுகள் முதல் முறையாக உருவாக்குவதோடு, மின்னணு நுழைவாயில் மாதிரி இணையம், பொருட்காட்சியக ஒன்றியம், நுண்கலை காட்சியக ஒன்றியம், நூலக ஒன்றியம் முதலிய ஒத்துழைப்பு மேடையின் உருவாக்கத்தையும் முன்னேற்றியுள்ளன. அரசியல், பொருளாதாரம், பண்பாடு முதலிய துறைகளிலான பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்புக்கு இவை எல்லாம் பயனுள்ள உத்தரவாதம் அளிக்கும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் தெரிவித்தார்.

14:29

பயனுள்ள முறையிலான ஒத்துழைப்பு, பிரிக்ஸ் ஒத்துழைப்பின் அடிப்படையாகும். வேர்ப்பகுதி ஆழமாக இருந்தால் தான், இலைகள் செழுமையாக வளர முடியும். இவ்வாண்டு பிரிக்ஸ் பயனுள்ள ஒத்துழைப்பு, புதிய முன்னேற்றங்களைப் பெற்றுள்ளது. வர்த்தக வசதிமயமாக்கம், சேவை வர்த்தகம், நாணயப் பரிமாற்றம், அரசு மற்றும் சமூக முதலீட்டு ஒத்துழைப்பு முதலிய துறைகளில் ஒத்துழைப்பு நெறிவரைபடங்கள் வகுக்கப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டு பணியின் மூலம், பெரிய வர்த்தக முதலீட்டுச் சந்தை, பெரிய நாணயப் புழக்கம், பெரிய அடிப்படை வசதி ஒன்றிணைப்பு முதலிய இலக்குகளின் திசைக்கு பிரிக்ஸ் நாடுகள் புதிய நடை போட்டுள்ளன என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் கூறினார்.

13:45

பிரிக்ஸ் நாடுகள் நீண்டகால வரலாற்றையும் எழில் மிக்க கலாச்சாரத்தையும் கொண்டவை. இவை மதிப்புக்குரிய செல்வமாகும். இவ்வாண்டில் ஐந்து நாடுகளிடையிலான மானுட தொடர்பு மற்றும் ஒத்துழைப்பு நிகழ்ச்சிகள் பன்முகங்களிலும் நடைபெற்று வருகின்றன. விளையாட்டுப் போட்டி, திரைப்பட விழா, பண்பாட்டு விழா, பாரம்பரிய மருத்துவக் கூட்டம் ஆகியவை, இந்த ஐந்து நாடுகளின் மக்களால் வரவேற்கப்பட்டவை. இத்தகைய பரிமாற்றங்களும் ஒத்துழைப்புகளும் தொடர்ந்து முறையாக நடைபெறுவதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஷிச்சின்பீங் கூறினார்.

13:35

பிரிக்ஸ் நாடுகள், முக்கிய செல்வாக்குடைய நாடுகளாகும். முக்கிய பிரச்சினைகளில் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை ஆழமாக்கி, மேலும் நியாயமான சர்வதேச ஒழுங்கை உருவாக்க வேண்டும். மேலும், உலகப் பொருளாதார நிர்வாகத்தில் சீர்திருத்தத்தை விரைவுபடுத்தி, வளர்ந்து வரும் சந்தை மற்றும் வளரும் நாடுகளின் பிரதிநிதித்துவம் மற்றும் கருத்து வெளிப்பாட்டு உரிமையை உயர்த்தி, பல்வேறு நாடுகளின் வளர்ச்சிக்கு சீரான சூழ்நிலையை உருவாக்க வேண்டுமென பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் ஒருமனதாக கருத்து தெரிவித்தனர் என்று சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 5ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். 

13:18

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், சர்வதேச நாணய நெருக்கடி உள்ளிட்ட பெரிய மாற்றத்தின் சோதனைக்குப் பின், வளர்ந்து வரும் நாடுகளும், வளரும் நாடுகளும் ஒற்றுமையாக ஒத்துழைத்து, ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறும் புதிய பாதையை பிரிக்ஸ் நாடுகள் ஆராய்ந்துள்ளது. சியாமென் உச்சி மாநாட்டை புதிய துவக்கமாகக் கொண்டு, மேலும் நெருக்கமான, பரந்த, பன்முகமான நெடுநோக்குக் கூட்டாளியுறவைக் கூட்டாக உருவாக்கி, பிரிக்ஸ் ஒத்துழைப்பின் 2ஆவது பொன்னிற பத்தாண்டைத் துவக்க பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உறுதி பூண்டிருக்கின்றனர் என்று கூறினார்.

12:31

செய்தியாளர் கூட்டம் நடைபெறுகிற இடம்

12:23

தற்போது, இதை செய்தியாளர்கள் கேட்டறிந்து வருகிறார்கள்

12:20

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 5ஆம் நாள் நண்பகல் உலக நாடுகளைச் சேர்ந்த செய்தியாளர்களைச் சந்தித்து, 9ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு,வளர்ந்து வரும் சந்தைகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை ஆகியற்றின் சாதனைகளை விரிவாக அறிமுகம் செய்கிறார்.

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்