சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாட்டின் துவக்க விழா

2017-10-18 13:09:21
Comment
பகிர்க
பகிர்க Close
Messenger Messenger Pinterest LinkedIn
13:09

சீன கம்யூனிஸ்ட் கட்சி 19ஆவது தேசிய மாநாட்டின் அறிக்கையின்படி, சீனா நீதி சட்டம், உயிரின வாழ்க்கைச் சூழல், கண்காணிப்பு, இராணுவம் முதலிய துறைகளில் தலைமை கண்காணிப்பு வாரியங்களை நிறுவ உள்ளது. மத்திய கமிட்டியின் சட்டப்படி, நாட்டினை ஆளுவது தொடர்பான தலைமைக் குழு, அரசு சார் இயற்கை வளச் சொத்து நிர்வாகம் மற்றும் இயற்கை உயிரின வாழ்க்கைச் சூழல் கண்காணிப்பு வாரியம், நாடு, மாநிலம், நகர், மாவட்டம் ஆகிய 4 நிலை கண்காணிப்பு ஆணையங்கள், படையிலிருந்து ஓய்வு பெற்ற இராணுவப் படையினர்களுக்கான நிர்வாக மற்றும் உத்தரவாத நிறுவனம் முதலியவை இவற்றில் அடங்குகின்றன.

12:46

புதிய காலத்தில் காலடியெடுத்து வைக்கும் சீனா சுதந்திரமான சுமூகமான அண்டை நாட்டுறவுக் கொள்கையில் ஊன்றி நின்றுள்ளது. பல்வேறு நாட்டு மக்கள் வளர்ச்சிப் பாதையைச் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கும் உரிமைக்கு சீனா மதிப்பளித்து வருகிறது. சர்வதேச நியாயம் மற்றும் நேர்மையைப் பேணிக்காத்து வருகிறது. பிற நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடுவதை சீனா எதிர்த்து வருகிறது என்று 19ஆவது தேசிய மாநாட்டின் பணியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்காப்பு தேசிய பாதுகாப்புக் கொள்கையை சீனா நடைமுறைப்படுத்தி வருகிறது. சீனாவின் வளர்ச்சி எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தலாக இருக்காது என்றும் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

12:39

உலகில் புதிய இராணுவப் புரட்சியின் வளர்ச்சி முன்னேற்றப் போக்கு மற்றும் சீனத் தேசிய பாதுகாப்பின் தேவையின்படி, 2020ஆம் ஆண்டுக்குள், சீனாவின் இராணுவப் படையில் இயங்திரமயமாக்கத்தை நனவாக்குவதையும், தகவல் மயமாக்கத்தின் கட்டுமானத்தில் முக்கிய முன்னேற்றமடைவதையும் சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகமும் இராணுவமும் உத்தரவாதம் செய்ய வேண்டும். 2035ஆம் ஆண்டுக்குள், சீனத் தேசிய பாதுகாப்பு மற்றும் இராணுவத்தின் நவீனமயமாக்கத்தை அடிப்படையில் நனவாக்க வேண்டும். இந்நூற்றாண்டின் மத்தியக் காலத்தில், உலகின் முன்னணி இராணுவப் படையை சீனா உருவாக்க வேண்டும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது தேசிய மாநாட்டின் அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

12:37

சீனா, பசுமையான கரிக்குறைந்த சுழற்சி வளர்ச்சியுடைய பொருளாதார அமைப்பு முறையை உருவாக்கி, தூய்மை திட்டப்பணி முதன்மைக்கான நாணய முறைமையை வளர்த்து, காற்று, நீர், மண் ஆகியவற்றில் நிலவும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தி, கரியமில வாயுவின் வெளியேற்ற வரையறையை உயர்த்தி, உலக சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுக்கும் என்று ஷிச்சின்பிங் மாநாட்டு அறிக்கையில் கூறினார்.

சீனாவின் உயிரின சுற்றுச்சூழல் 2035ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் மாறும். அழகான சீனா என்ற இலக்கு அடிப்படையில் நனவாக்குவோம் என்று இவ்வறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது. 

12:22

சீனத் தனிச்சிறப்பியல்பான அடிப்படை மருத்துவ சிகிச்சை அமைப்பு முறை, மருத்துவ உத்தரவாத அமைப்புமுறை, தரமான உயர் பயனுள்ள மருத்துவ சிகிச்சை சேவை அமைப்பு முறை ஆகியவற்றை பன்முகங்களிலும் சீனா நிறுவும். கடும் நோய்களைக் தடுத்து கட்டுப்படுத்தி, உணவு பாதுகாப்பு நெடுநோக்கை நடைமுறைப்படுத்தி, வயதான மக்கள் தொகை பிரச்னையை ஆக்கப்பூர்வமாக சமாளிக்க வேண்டும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 19ஆவது தேசிய மாநாட்டில் வழங்கப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

12:09

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாட்டின் துவக்க விழாவில் ஷிச்சின்பீங் கூறுகையில், கல்வி இலட்சியத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நகர்-கிராம கட்டாய கல்வி ஒருமைப்பாட்டு வளர்ச்சியை முன்னேற்றி, கிராக கட்டாய கல்வியில் வெகுவான கவனம் செலுத்த வேண்டும். பள்ளிக்கு முந்திய கல்வி, சிறப்புக் கல்வி, இணையக் கல்வி ஆகியவற்றை செவ்வனே செய்ய வேண்டும். முதல் தர பல்கலைக்கழகத்தின் கட்டுமானத்தை விரைவுபடுத்த வேண்டும். மாணவர் மானிய முறைமையை மேம்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

12:07

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாட்டின் துவக்க விழா, இன்று புதன்கிழமை(18ஆம் நாள்)காலை பெய்ஜிங்கில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது மத்திய கமிட்டியின் சார்பில் ஷிச்சின்பிங் மாநாட்டிற்கு அறிக்கை தாக்கல் செய்து, சீனாவின் எதிர்கால வளர்ச்சிக்கான பொதுத் திட்டத்தை அளிக்கிறார்.

12:05

11:55

சட்டப்படி கட்டுமானத்தின் மீதான ஒட்டுமொத்த தலைமையை வலுப்படுத்த, சட்டப்படி நாட்டை ஆட்சிப் புரிவதற்கான தலைமைக் குழுவைச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி நிறுவ உள்ளது என்று 19ஆவது தேசிய மாநாட்டின் பணியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பு சட்டத்தின் நடைமுறையாக்கம், அதிகாரம் மற்றும் கண்காணிப்பை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி வலுப்படுத்தும். அரசியல் அமைப்பு சட்டத்தை மீறிய சிறப்புரிமை எந்த அமைப்பிற்கும் தனிநபருக்கும் கிடையாது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

11:54

2020ஆம் ஆண்டுக்குள், சீனக் கிராமப்புறங்களில் தற்போதைய வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்கள் அனைவரையும் வறிய நிலையில் இருந்து விடுவிக்கும் இலக்கை சீனா நிறைவேற்றும். வறுமைப் பிரச்சினைக்கான தீர்வு உண்மையாகவும் பயனுள்ளதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்துள்ளார்.

 

11:40

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது தேசிய மாநாட்டில் வழங்கிய பணியறிக்கையில், கிராம வளர்ச்சித் திட்டத்தை முதல்முறையாக முன்வைத்தார். நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்குமிடையிலான ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கொள்கை அமைப்பு முறையை உருவாக்கி முழுமையாக்குவது, வேளாண்துறைக்கான நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவது, கிராமத்தில் நிர்வாக அமைப்பு முறையை மேம்படுத்துவது, விவசாயிகளின் சொத்து உரிமை நலனை உத்தரவாதம் செய்வது, நவீன வேளாண் தொழிலின் அமைப்பு முறைமையை உருவாக்குவது, விவாசாயிகள் தொழில் புரிந்து, வருமானத்தை அதிகரிக்கும் வழிமுறையை விரிவாக்கம் செய்வதற்கு ஆதரவு அளிப்பது முதலியவை, இத்திட்டத்தில் இடம்பெறுகின்றன. 

11:28

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தை மையமாகக் கொண்டு, விரிவான கலந்தாய்வு கூட்டுப் பங்கெடுப்பு மற்றும் பயன்களின் பகிர்வு என்ற கோட்பாட்டின்படி, புத்தாக்க ஆற்றலை வலுப்படுத்தி ஒத்துழைப்புகளை விரிவாக்கி, திறந்த கட்டமைப்பையை உருவாக்க வேண்டும். வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான உயர் நிலை தன்னிச்சையான மற்றும் வசதி மயமாக்க கொள்கையை செயல்படுத்தி, சந்தை நுழைவுக்கான அனுமதியை பெருமளவில் தளர்த்தி, சேவைத் துறையின் வெளிநாட்டுத் திறப்பு அளவை அதிகரித்து, அந்நிய வணிகர்களின் முதலீட்டு உரிமை மற்றும் நலன்களைப் பாதுகாக்க வேண்டும். சீனாவில் பதிவு செய்யப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு சமமான அணுகுமுறையை வழங்க வேண்டும். சர்வதேச உற்பத்தி ஆற்றல் ஒத்துழைப்பை முன்னேற்றி, வர்த்தகம், முதலீடு மற்றும் நிதித் திரட்டல், உற்பத்தி, சேவை ஆகியவற்றுக்கு முழு உலகிலும் பரவலாகும் பிணையத்தை உருவாக்க வேண்டும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 19ஆவது தேசிய மாநாட்டின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

11:16

10:51

10:46

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாடு தொடங்கிய பிறகு புதிய காலத்திலேயே சீனத் தனிச்சிறப்புமிக்க சோஷலிசச் சிந்தனை உருவாக்கப்பட்டுள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் சீன மக்களும் சீனத் தேசத்தின் பெரும் மறுமலர்ச்சியை நனவாக்குவதற்கான செயல்பாட்டு வழிகாட்டியாக இந்த சிந்தனை திகழ்கிறது. அதை நீண்டகாலம் கடைப்பிடித்து வளர்க்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டுக்குள் குறிப்பிட்ட வசதி படைத்த சமூகத்தையும், 2050ஆம் ஆண்டுக் காலத்தில் நவீனமயமாக்க வல்லரசையும் உருவாக்க சீனா பாடுபடும் என்று இந்தச் சிந்தனையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், மக்களை மையமாக கொள்ளும் வளர்ச்சி சிந்தனையை ஆளும் கட்சி பின்பற்ற வேண்டும் என்று, மனிதர்களின் பன்முகமான வளர்ச்சியை மேம்படுத்தி, அனைவரும் செல்வமடைய வேண்டும் என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

10:44

10:44

10:37

நீண்டகால முயற்சிகளுடன் “சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிசம்”புதிய யுகத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 19ஆவது தேசிய மாநாட்டில் மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் அறிக்கையை வழங்கிய போது தெரிவித்தார்.

இந்த யுகம், புதிய வரலாற்று நிலைமையில் சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிசத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பெறும் யுகமும், பொது மக்களின் கூட்டு செழுமையைப் படிப்படியாக நனவாக்கும் யுகமும், சீனக் கனவை நிறைவேற்றும் யுகமும், மனிதகுலத்துக்கு சீனா மேலும் பெரும் பங்காற்றும் யுகமும் ஆகும் என்று ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.

10:29

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில், உலகப் பொருளாதாரம் மந்தமான நிலையில் இருக்கும் பின்னணியில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சி வழிமுறையை மாற்றிக் கொண்டு, பொருளாதார வளர்ச்சியில் மாபெரும் சாதனைகளைப் பெற்றுள்ளது. மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு 80 லட்சம் கோடி யுவானை எட்டியுள்ளது. உலகப் பொருளாதார அதிகரிப்புக்கான சீனாவின் பங்கு, 30 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. எண்ணியல் பொருளாதாரம் உள்ளிட்ட புதிய தொழில்கள் நன்றாக வளர்ச்சியடைந்து வருகின்றன. வேளாண் துறைக்கான நவீனமயமாக்கக் கட்டுமானம் சீராக முன்னேற்றப்பட்டு வருகிறது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை உள்ளிட்ட திட்டப்பணிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. வெளிநாட்டு வர்த்தகம், முதலீடு மற்றும் அன்னிய செலாவணி கையிருப்பு, உலக முன்னணியில் உள்ளது என்று அவர் தெரிவித்தார். 

10:10

ஷிச்சின்பீங் பேசுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கட்சியின் ஒழுங்குமுறையை வலுப்படுத்தியுள்ளது. முழு கட்சியின் நம்பிக்கை மேலும் உறுதியாக மாறியுள்ளது. கண்ணோட்டம் மேலும் வலிமையாகியுள்ளது. கட்சிக்குள் உள்ள சட்ட விதிகளின் அமைப்புமுறை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. பொது மக்கள் மிக அதிகமாக கவனம் செலுத்தும் பிரச்சினைகளையும் கட்சியின் ஆட்சி புரியும் அடிப்படையை அச்சுறுத்தும் குறிப்பிட்ட பிச்சினைகளையும் தீர்க்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். 

10:06

அக்டோபர் 18ஆம் நாள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாட்டில் ஷிச்சின்பீங் ஆற்றிய சிறப்புரையில், மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சி சிந்தனையை சீன கம்யூனிஸ்ட் கட்சி வலுவாகப் பின்பற்றி வருகிறது என்று கூறினார். வறுமை ஒழிப்புப் பணியில் கடந்த ஆண்டுகளில் தீர்க்க ரீதியிலான முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன. முழு சீனாவிலும் 6 கோடிக்கும் மேற்பட்டோர் வறுமையிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். சீனாவில் வறுமை விகிதம் 10.2 விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடாகக் குறைந்துள்ளது என்று அவர் கூறினார்.

10:04

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளர் ஷிச்சின்பிங் பணியறிக்கை வழங்கிய போது கூறுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில், சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த தூதாண்மை பன்முகங்களிலும் முன்னேற்றப்பட்டுள்ளது. பன்முக முப்பரிமாண தூதாண்மை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவின் கூட்டு கட்டுமானத்தை சீனா நடைமுறைப்படுத்தியுள்ளது. ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியின் நிறுவலை முன்வைத்துள்ளது. மனிதகுல பொது சமூகத்தின் கட்டுமானத்தை முன்னேற்றியுள்ளது. சீனாவின் சர்வதேச செல்வாக்கு மேலும் மேம்பட்டுள்ளது. உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு புதிய முக்கியமான பங்களிப்பை ஆற்றியுள்ளது என்றார் அவர். 

09:59

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாட்டின் துவக்க விழா, இன்று புதன்கிழமை(18ஆம் நாள்)காலை பெய்ஜிங்கில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது மத்திய கமிட்டியின் சார்பில் ஷிச்சின்பிங் மாநாட்டிற்கு அறிக்கை தாக்கல் செய்து, சீனாவின் எதிர்கால வளர்ச்சிக்கான பொதுத் திட்டத்தை அளிக்கிறார்.

19ஆவது தேசிய மாநாட்டில் பங்கேற்றுள்ள 2000க்கும் அதிகமான பிரதிநிதிகள், ஷிச்சின்பிங் தாக்கல் செய்துள்ள அறிக்கையையும், ஒழுங்குமுறை மற்றும் பரிசோனைக்கான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி தாக்கல் செய்துள்ள பணியறிக்கையையும் பரிசீலனை செய்வர். மேலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சிச் சாசனத்தின் திருத்தத்தை பரிசீலனை செய்வதோடு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மத்திய கமிட்டியையும், ஒழுங்குமுறை மற்றும் பரிசோனைக்கான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மத்திய கமிட்டியையும் பிரதிநிதிகள் தேர்ந்தெடுப்பாளர்கள்.

 

 

09:41

08:56

08:47

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாடு, 2017ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் நாள் காலை 9மணிக்கு பெய்ஜிங்கில் துவங்குகிறது. சீன வானொலி இந்த துவக்க விழாவை நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்