புதிய மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர்களின் சந்திப்பு

2017-10-25 13:49:55
Comment
பகிர்க
பகிர்க Close
Messenger Messenger Pinterest LinkedIn
13:49

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாட்டின் தொடக்கம் முதல் இது வரை, மொத்தமாக 165 நாடுகளின் 452 முக்கிய கட்சிகளிடம் இருந்து 855 வாழ்த்துக் கடிதங்கள் பெறப்பட்டுள்ளன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் சார்பில், இக்கட்சிகளுக்கு ஷிச்சின்பீங் நன்றி தெரிவித்தார். நாட்டு இறையாண்மை, பாதுகாப்பு, வளர்ச்சியின் நலன் ஆகியவற்றை உறுதியாகப் பேணிக்காத்து, பல்வேறு நாடுகளின் மக்களுடன் சேரந்து,  மனித குலத்தின் தலைவிதி பொதுச் சமூகத்தை ஆக்கப்பூர்வமாக உருவாக்கி, மனித குலத்தின் அமைதி மற்றும் வளர்ச்சி எனும் இலட்சியத்திற்கு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் சீன மக்களும் மேலும் முக்கிய பங்காற்றும் வேண்டும் என்று ஷி ச்சின்பீங் 25ஆம் நாள் தெரிவித்தார்.

13:23

ஷீச்சின்பிங் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், 2021ஆம் ஆண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட நூறாம் ஆண்டு நிறைவாகும். சீனக்கம்யூனிஸ்ட் கட்சி சீனத் தேசத்தின் நீண்டகால மாபெரும் லட்சியத்தைக் கட்டியமைக்க முயற்சி செய்து வருகிறது. எப்போதும் சுறுசுறுப்பான இளம் உயிராற்றலை நிலைநிறுத்தி, பொது மக்களுக்குச் சேவை புரிய வேண்டும். எப்போதும் போல பன்முகங்களிலும் கட்சியின் ஒழுங்கு முறையைக் கண்டிப்பான முறையில் நிர்வகிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

13:19

2020ஆம் ஆண்டுக்குள், சீனா, குறிப்பிட்ட வசதி படைத்த சமூகமாக உருவாக்கப்படும்.  இந்த இலக்கில் அனைவரும் இடம்பெறுவார்கள். வாக்குறுதியின்படி, வறுமை ஒழிப்புப் பணிகளை உறுதியாக நிறைவேற்றுவோம். மேலும், மக்கள் மையம் என்ற வளர்ச்சிக் கண்ணோடத்தைப் பின்பற்றி, மக்களின் நன்மை, இன்பம், மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை அதிகரிப்பதோடு, அனைவரும் கூட்டாகச் செல்வமடைவதை முன்னேற்றுவோம் என்று ஷி ச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.


13:10

2019ஆம் ஆண்டு, சீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவாகும். சீனா, புதிய வளர்ச்சிக் கருத்தைச் செயல்படுத்தி, பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சியை முன்னேற்றுவது, சீன மக்கள் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளின் மக்களுக்கு நன்மை புரியும். அத்துடன், 13ஆவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் பல்வேறு கடமைகளைத் தொடர்ந்து நிறைவேற்றுவதோடு, எதிர்காலத்தின் மீது புதிய திட்டத்தை வகுக்க வேண்டும் என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார். 

13:08

2018ஆம் ஆண்டு சீனா சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு கொள்கை மேற்கொண்ட 40ஆம் ஆண்டு நிறைவாக இருக்கிறது. சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு சமகால சீனாவின் தலைவிதியை முடிவு செய்த முக்கிய கொள்கை முடிவாகும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆனுபவங்களைத் தொகுத்து, நாட்டு ஆட்சி முறை மற்றும் நிர்வாக திறனின் நவீனமயமாக்கத்தைத் தொடர்ந்து முன்னேற்றி, சீர்திருத்தத்தை உறுதியாக ஆழமாக்கி, வெளிநாட்டுத் திறப்பை விரிவாக்கும். சீனத் தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சி சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு நடைமுறைப்படுத்திய முன்னேற்றப் போக்கில் நனவாக்கப்படும் என்று ஷீ ச்சின்பீங் செய்தியாளர்களிடம் நம்பிக்கை தெரிவித்தார்.

12:58

நீண்டகால முயற்சிகளுடன், தற்போது, சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிசம், புதிய வரலாற்றுக் காலத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. புதிய காலத்தில் புதிய தோற்றம் காணப்பட வேண்டும் என்றும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

வரும் 5 ஆண்டுகளில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதன் 100ஆவது ஆண்டு நிறைவின் போது குறிப்பிட்ட வசதி படைத்த சமூகத்தை உருவாக்கும் இலக்கை நனவாக்க வேண்டும் என்றும், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 100ஆவது ஆண்டு நிறைவின் போது, நவீனமயமாக்கமுடைய நாட்டை உருவாக்கும் இலக்கைத் தொடக்கி வைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

12:35

ஷி ச்சின்பிங், லீ கெச்சியாங், லீ ட்சான்சூ, வாங் யாங், வாங் ஹூனிங், ட்சாவ் லெஜி, ஹான் ட்செங் ஆகியோர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

12:19

ஷி ச்சின்பிங், லீ கெச்சியாங், லீ ஜான்சூ, வாங் யாங், வாங் ஹூனிங், சாவ் லெஜி, ஹான் ட்செங் ஆகியோர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

12:03

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது மத்திய கமிட்டியின் முதலாவது முழு அமர்வுக் கூட்டம், அக்டோபர் 25ஆம் நாள் காலை பெய்ஜிங்கில் நிறைவு பெற்றது. ஷி ச்சின்பிங், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


11:41

சந்திப்பில் பங்கேற்ற பன்னாட்டுச் செய்தியாளர்கள்

10:56

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது மத்திய கமிட்டியின் முழு அமர்வுக் கூட்டத்தில் புதிய மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள், இன்று புதன்கிழமை (25ஆம் நாள்) காலையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களைச் சந்திப்பர்.

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்