தேசிய மக்கள் பேரவைக் கூட்டத் தொடர் துவக்க விழா

2018-03-05 11:40:14
Comment
பகிர்க
பகிர்க Close
Messenger Messenger Pinterest LinkedIn
11:40

சீனாவின் 13ஆவது தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத் தொடர் மார்ச் 5ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் கடந்த 5 ஆண்டுகளுக்கான அரசுப் பணியறிக்கையை வழங்கி வருகிறார்.

11:30

அமைதி வளர்ச்சிப் பாதையில் உறுதியாக ஊன்றி நின்று, புதிய ரக சர்வதேச உறவை உருவாக்குவதை சீனா முன்னேற்றும். பல்வேறு நாடுகளுடன் இணைந்து, பொது எதிர்கால சமூகத்தை உருவாக்க சீனா விரும்புகின்றது என்று சீன அரசு பணியறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது. போ ஆவ் ஆசிய மண்றத்தின் ஆண்டுக் கூட்டம், ஷாங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு, சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மண்றம் ஆகிய தூதாண்மை நிகழ்வுகளை சரியாக நடத்த சீனா திட்டமிட்டுள்ளது.

11:30

அரசியல் அமைப்புச் சட்டப்படி ஆட்சி புரிந்து, சட்ட விதிகளின் படி நிர்வாகம் செய்வதை முன்னேற்றும் வகையிலும், அரசின் செயல் திறனை மேம்படுத்தும் வகையிலும் சீனா பாடுபடும் என்று லீ கெச்சியாங் தெரிவித்தார்.

11:30

2018ஆம் ஆண்டில் இறக்குமதியை சீனா ஆக்கபூர்வமாக விரிவாக்கி, வர்த்தகம் மற்றும் முதலீட்டின் தாராளத்தையும் வசதியையும் முன்னேற்றும். சீன அரசு, முதல் சீன சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியை நடத்தி, வாகனம், அன்றாட வாழ்க்கைக்கான பொருட்கள் ஆகிய பொருட்களின் இறக்குமதி வரியை குறைக்க உள்ளது.

11:28

சீனாவின் அதியுயர் அதிகார நிறுவனத்தின் பரிசீலனைக்காக, மார்ச் 5-ஆம் நாள் அரசுப் பணியறிக்கை ஒப்படைக்கப்பட்டது. அதில், கிராமப்புறங்களை விறுவிறுப்பாக வளர்க்கும் நெடுநோக்கு திட்டத்தை செயல்படுத்தும் வகையில், அரசு, அறிவியல் வழிமுறையில் திட்டத்தை வகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. புதிதாக கட்டியமைக்கப்பட்டு திருத்தி அமைக்கப்படும் கிராமப்புற நெடுஞ்சாலைகளின் நீளம் 2இலட்சம் கிலோமிட்டரை எட்டும். மேலும், கழிவறைச் சீர்திருத்தமும் கிராமங்களில் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11:28

மாசுபாடுகளைக் கட்டுப்படுத்தும் பணிகளில் மேலதிக முன்னேற்றங்களை பெறும் வகையில் சீனா தொடர்ந்து செயல்படும். இதற்காக,  நீர் மற்றும் நில மாசுபாடுகளைத் தடுக்கும் வகையில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். கழிவுப் பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து சீனாவிற்கு ஏற்றிச் செல்ல தடை விதிக்கப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான “சிவப்புக் கோடு” உறுதிபடுத்தப்படும்.

11:06

வணிகச் சூழலை மேம்படுத்தும் வகையில், தொழில் நிறுவனங்களின் வரி வசூலிப்பைக் குறைக்க சீன அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாண்டில் 80 ஆயிரம் கோடி யுவான் அளவில் வரி வசூலிப்புத் தொகை குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

10:54

புதுமையாக்கத்தின் அடிப்படையில் நாட்டை உருவாக்கும் முன்னேற்றத்தை விரைவுபடுத்தும் வகையில், அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறைச் சார்ந்த ஒரு தொகுதி முக்கிய செயல்திட்டங்களைச் சீனா தொடக்கி வைக்கவுள்ளது என்று சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் அரசுப் பணியறிக்கையில் குறிப்பிட்டார்.

10:29

2018ஆம் ஆண்டு பொருளாதாரத் துறையில் புதிய உந்து சக்தி வாய்ந்த தொழில்களைச் சீனா வளர்த்து பெருக்கி வருகிறது. இவற்றில், பெருந்தரவு வளர்ச்சி திட்டத்தைச் செயல்படுத்துவது, புதிய தலைமுறைச் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டை வலுப்படுத்துவது, மருத்துவம், கல்வி, பண்பாடு, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் “இணையம்+ ” என்ற நெடுநோக்குத் திட்டத்தை முன்னேற்றுவது ஆகியவை இடம்பெறுகின்றன. மேலும், இணைய வேகத்தை உயர்த்தி, கட்டணத்தைக் குறைக்கவும், நகரப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களுக்கு உயர்வேக இணைய சேவை கிடைக்கவும், சீனா பெரிதும் முயற்சி செய்து வருகிறது.

10:22

2018ஆம் ஆண்டு சீனாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு அதிகரிப்பு விகிதம், 6.5 விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

10:20

பன்முகமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு, வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று லீ கெச்சியாங் வலியுறுத்தினார். வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை என்பது, சீனாவின் அடிப்படைத் தேசியக் கொள்கையாகும். இந்நிலையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவை சீனா ஆரம்பித்து முன்னெடுத்து வருகிறது. இதற்காக, ஷாங்காய் உள்ளிட்ட 11 தடையற்ற வர்த்தக முன்னோடி மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அன்னிய முதலீட்டுத் துறையில், அனுமதி அளிக்கும் முறைமைக்குப் பதிலாக, எதிர்மறை பட்டியல் என்ற நிர்வாகம் செயலுக்கு வந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

09:47

கடந்த 5 ஆண்டுகளில் சீனாவில் சுமார் 6.8 கோடி மக்கள் வறுமை நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.  குடிமக்களின் ஆண்டு வருமானம், சராசரியாக 7.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. சீனாவில் நடுத்தர வருமானம் பெற்றவர்களின் எண்ணிக்கை, உலகளவில் மிக அதிகமாக இருக்கிறது என்று லீ கெச்சியாங் அரசுப் பணியறிக்கையில் தெரிவித்தார்.

09:33

கடந்த 5 ஆண்டுகாலத்தில், சீன மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு 54 இலட்சம் கோடி யுவானிலிருந்து 82 இலட்சத்து 70 ஆயிரம் கோடி யுவானாக அதிகரித்துள்ளது. சீனப் பொருளாதார அதிகரிப்பு, உலகப் பொருளாதார அதிகரிப்பில் 30 விழுக்காடு வகிக்கின்றது என்று சீன அரசவை, சீன மக்கள் பேரவையிடம் ஒப்படைக்கப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

09:31

சீனாவின் 13ஆவது தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத் தொடர் துவக்க விழா பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் நடைபெறுகிறது.

09:17

சீனாவின் 13ஆவது தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத் தொடர் மார்ச் 5ஆம் நாள் காலை 9மணிக்குப் பெய்ஜிங்கில் துவங்கியது. சீன அரசவையின் சார்பில், தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் கடந்த 5 ஆண்டுகளுக்கான அரசுப் பணியறிக்கையை வழங்கி வருகிறார்.

09:02

சீனாவின் 13ஆவது தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத் தொடர் துவக்க விழா பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் நடைபெறுகிறது.

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்