எஸ்சிஓ உச்சி மாநாடு

2018-06-11 15:00:07
Comment
பகிர்க
பகிர்க Close
Messenger Messenger Pinterest LinkedIn
15:00

நடப்பு உச்சி மாநாட்டுத்துக்குத் தலைமைத் தாங்கிய சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஷாங்காய் எழுச்சியை வெளிப்படுத்தி எதிர்காலப் பொதுச் சமூகத்தை கூட்டாகக் கட்டியமைப்பது என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்.

14:59

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு ஜுன் 10-ஆம் நாள் சீனாவின் ஷான்டொங் மாநிலத்தின் ட்சிங் தாவ் நகரில் நடைபெற்றது.
15:26

எஸ்சிஓவின் ட்சிங்தாவ் உச்சி மாநாடு, 10ஆம் நாள் நிறைவுபெற்றது. இதை அடுத்து, எஸ்சிஓவின் தலைமைப் பதவியை கிர்ஜிஸ்தான் வகிக்கும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டு உச்சி மாநாடு சுமுகமாக நடத்தும் வகையில், பல்வேறு தரப்புகள் ஊக்கமுடன் கிர்ஜிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும்.

15:23

பரஸ்பர நன்மை மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில், பார்வையாளர் நாடுகள், பேச்சுவார்த்தைக் கூட்டாளி நாடுகள் உள்ளிட்ட நாடுகளுடனான ஒத்துழைப்பை ஆழமாக்கி, ஐ.நா. மற்றும் பிற சர்வதேச அமைப்புகளின் பரிமாற்றத்தை அதிகரிக்க எஸ்சிஓ உறுப்பு நாடுகள் விரும்புகின்றன என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

15:21

ஒன்றுக்கொன்று, நாகரிகங்களின் பன்மைத் தன்மையையும் சமூக மதிப்புக் கருத்தையும் மதிக்கும் அடிப்படையில்,  பண்பாடு, கல்வி, அறிவியல் தொழில் நுட்பம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம், சுற்றுலா, இளைஞர்கள் பரிமார்றம், செய்தி ஊடகம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் பயனுள்ள பலதரப்பு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை மேற்கொண்டு, பண்பாட்டுப் பரிமாற்றத்தையும் மக்களின் தொடர்பையும் எஸ்சிஓ மேம்படுத்த வேண்டும் என்று ட்சிங்தாவில் பங்கேற்றுள்ள தரப்புகளும் ஒருமனதாக வலியுறுத்துவதாக, ஷிச்சின்பிங் கூறினார்.

15:21

பொருளாதார  உலகமயமாக்கம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுப் போக்கு ஆகியவை முக்கிய திசையாக விளங்கும். எஸ்சிஓவின் ட்சிங்தாவ் உச்சி மாநாடு, பல்வேறு தரப்புகளுடன் இணைந்து உலக வர்த்தக அமைப்பின் அதிகாரப்பூர்வத்தன்மையைப் பேணிக்காத்து, பலதரப்பு வர்த்தக அமைப்புமுறையை வலுப்படுத்தும். எந்த விதமான வர்த்தகப் பாதுகாப்பு வாதத்தையும் எதிர்க்கும். பரஸ்பர நன்மை மற்றும் கூட்டு வெற்றி என்ற அடிப்படையில், பொருளாதார வர்த்தகம், முதலீடு, நிதி, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க பாடுபடும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

15:20

பாதுகாப்பு என்பது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தொடரவல்ல வளர்ச்சி அடைவதற்கான அடிப்படையாகும் என்று இவ்வமைப்பின் ட்சிங் தாவ் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பல்வேறு தரப்புகள் ஒருமனதாக கருத்து தெரிவித்தன. பொதுமை, பன்னோக்கம், ஒத்துழைப்பு மற்றும் தொடர்ச்சியான பாதுகாப்பு என்ற தத்துவத்தை பல்வேறு தரப்புகள் பின்பற்றி வருகின்றன. பிரிவினைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம் ஆகிய மூன்று சக்திகளை ஒழிக்கும் ஷாங்காய் பொது அறிக்கை, பயங்கரவாத எதிர்ப்பு பொது அறிக்கை, தீவிரவாத எதிர்ப்பு பொது அறிக்கை ஆகிய ஒத்துழைப்பு ஆவணங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் பிரதேசத்தின் பாதுகாப்பையும் நிதானத்தையும் கூட்டாகப் பேணிகாக்க வேண்டும் என்று, சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் இன்று இவ்வாறு கூறினார்.


15:19

வளர்ச்சி மற்றும் சீர்திருத்தம் காணும் காலத்தில் உலகம் தற்போது உள்ளது. நாடுகளுக்கிடையிலான தொடர்பு மேலும் நெருங்கியுள்ளது. உலகப் பொருளாதாரம் இன்னல்களைச் சந்தித்து மீட்சியடைவது கடினமாக உள்ளது. மேலும், சர்வதேச மற்றும் பிரதேச சூடான பிரச்சினைகளையும் உலகம் அடிக்கடி சந்தித்து வருகிறது. இந்நிலையில், பல்வேறு நாடுகள் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, அமைதி, சமத்துவம், திறப்பு, அனைத்தையும் உள்ளடக்கல், கூட்டு வெற்றி ஆகிய தன்மைகள் வாய்ந்த கூட்டுறவை ஆழமாக்கினால்தான், நீண்டகால நிலைப்புத் தன்மை மற்றும் வளர்ச்சியை நிறைவேற்ற முடியும் என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ட்சிங் தாவ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பல்வேறு தரப்புகள் ஒரு மனதாகக் கருத்து தெரிவித்தன. இத்தகவலைச் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ஜூன் 10ஆம் நாள் இவ்வுச்சி மாநாட்டுக்குப்பிறகு தெரிவித்தார்.

15:08

சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் 10ஆம் நாள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் செய்தியாளர்களைக் கூட்டாக சந்தித்த போது பேசுகையில, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் மற்றும் பார்வையாளர் நாடுகளின் தலைவர்கள்

சர்வதேச மற்றும் பிரதேச நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் ஆகியோர் சர்வதேச மற்றும் பிரதேசத்தின் முக்கிய பிரச்சினைகள் பற்றி கருத்துக்களை ஆழமாக பரிமாற்றி, பரந்தளவில் ஒத்தக்கருத்துக்களை உருவாக்கினர் என்று தெரிவித்தார். இந்தியா,பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இவ்வமைப்பில் சேர்ந்த பிறகு பெற்றுள்ள புதிய சாதனைகளை பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வெகுவாக பாராட்டினர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாட்டுத் தலைவர் செயற்குழுவின் ட்சிங் தாவ் அறிக்கையைக் கூட்டாக வெளியிட்டுள்ளோம் என்றும் ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.

12:51

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பொது எதிர்கால சமூகத்தை உருவாக்கும் வகையில், அடுத்த 3 ஆண்டுகளில் சீனா, இவ்வமைப்பின் உறப்பு நாடுகளைச் சேர்ந்த 2000  சட்ட அலமாக்கப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும். ட்சிங்தாவ் நகரில் சீன-ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உள்ளூர் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு முன்மாதிரி மண்டலத்தை கட்டியமைப்பதற்கு ஆதரவு அளிக்கப்படும். சீன-ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சட்ட சேவை கமிட்டி நிறுவப்படும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வங்கி கூட்டமைப்புக் கட்டுகோட்புக்குள் 3000 கோடி யுவான் மதிப்புள்ள சிறப்புக் கடன் திட்டப்பணி உருவாக்கப்படும். அத்துடன், பல்வேறு தரப்புக்கு வானிலை சேவை வழங்கப்படும் என்று சீன அரசுத்தலைவர் ஷி ச்சின்பிங்  தெரிவித்தார்.


12:22

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கான பொது எதிர்காலச் சமூகத்தையும், புதிய சர்வதேச உறவையும் கூட்டாக உருவாக்குவது குறித்து ஷி ச்சின்பிங் 5 ஆலோசனைகளை முன்வைத்தார். முதலாவதாக, ட்சிங் தாவ் அறிக்கை, நீண்டகால அண்டை நாட்டு சுமுகமான ஒத்துழைப்பு உடன்படிக்கையில் செயல் பணித்திட்டம் உள்ளிட்ட ஆவணங்களைப் பன்முகங்களிலும் செயல்படுத்தி, இவ்வமைப்பின் ஒற்றுமையை வலுப்படுத்துவது. இரண்டாவதாக, பயங்கரவாதம், பிரிவினைவாதம், அதி தீவிரவாதம் ஆகியவற்றை ஒடுக்குவதற்கான 2019-2021ஆம் ஆண்டின் ஒத்துழைப்பு பணித்திட்டத்தை ஆக்கமுடன் செயல்படுத்தி, அமைதி மற்றும் பாதுகாப்பான அடிப்படையை வலுப்படுத்துவது. மூன்றாவதாக, வளர்ச்சி நெடுநோக்குக்கான பரிமாற்றத்தை வலுப்படுத்தி, கூட்டு வளர்ச்சியின் வலிமைமிக்க இயக்காற்றலை உருவாக்குவது. நான்காவதாக, மனித பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை முன்னேற்றுவது. ஐந்தாவதாக, சர்வதேச ஒத்துழைப்புக்கான கூட்டாளி இணையத்தைக் கூட்டாக விரிவுபடுத்துவது ஆகிய 5 ஆலோசனைகளை அவர் தெரிவித்தார்.

12:22

“ஷாங்காய் குறிக்கோள்”, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டு செல்வமாகும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, உறுப்பு நாடுகளின் கூட்டுத் தாயகமாகும். மேலும், இந்தக் குறிக்கோளின் வழிகாட்டுதலில், இவ்வமைப்பின் உறுப்பு நாட்டுத் தலைவர்கள் மனம் ஒருமித்து, ஒத்துழைப்பு மேற்கொண்டு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கான பொது எதிர்காலச் சமூகத்தையும், புதிய சர்வதேச உறவையும் கூட்டாக உருவாக்கி, அமைதியான பாதுகாப்பான மற்றும் செழுமையான உலகத்தை நோக்கி கூட்டாக காலடி எடுத்து வைக்க வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் வேண்டுகோள் விடுத்தார்.

12:21

புதிய சிக்கல்களைத் தீர்த்து, அறைகூவல்களைச் சமாளிக்க, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு “ஷாங்காய் குறிக்கோளை” மேலதிகமாக நிறைவேற்ற வேண்டும்.  இதற்காக,  புத்தாக்கம், ஒருங்கிணைப்பு, தூய்மை, திறப்பு, பகிர்வு ரீதியிலான வளர்ச்சிக் கோட்பாடு,  பொதுமை, பன்னோக்கம், ஒத்துழைப்பு, தொடர்ச்சி ரீதியிலான பாதுகாப்புக் கோட்பாடு, திறப்பு, இணைப்பு, பரஸ்பர நன்மை, கூட்டுவெற்றி ரீதியிலான ஒத்துழைப்புக் கோட்பாடு, சமத்துவம், மேற்கோள், உரையாடல், உள்ளடக்குதல் ரீதியிலான நாகரிகக் கோட்பாடு,  கூட்டுக் கலந்தாய்வு, கூட்டுக் கட்டுமானம், கூட்டுப் பகிர்வு ரீதியிலான உலக நிர்வாகக் கோட்பாடு  ஆகியவற்றை எஸ்சிஓ கடைப்பிடிக்க வேண்டும் என்ற கருத்தை ஷிச்சின்பிங் முன்வைத்தார்.

12:16

உலக நிலைமையையும் கால ஓட்டத்தையும் சரியாக அறிந்துகொண்டு செயல்பட வேண்டும். பூவி என்ற கிராமத்தில் பல்வேறு நாடுகளின் நலன் நாளுக்கு நாள் நெருங்கி, ஒன்றிணைந்து வருகிறது. மேலும், ஒத்துழைப்பு மூலம் கூட்டு வளர்ச்சியடையும் போக்கு நிலவுகிறது. வேறுபட்ட நாகரிகங்களிடையேயான பரிமாற்றம் பல்வேறு நாட்டு மக்களின் பொது விருப்பமாக இருக்கிறது என்று ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.

 

12:14

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு வலிமைமிக்க உயிராற்றல் மற்றும் வலுவான ஒத்துழைப்பு உந்து சக்தியுடன் வளர்ந்து வருகிறது. இதற்கு மிக முக்கியக் காரணம்: பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர நன்மை, சமத்துவம், கலந்தாய்வு, நாகரிகங்களின் பன்மைத் தன்மையை மதித்தல், கூட்டு வளர்ச்சியை நாடுதல் உள்ளடங்கிய“ஷாங்காய் குறிக்கோள்”ஆகும்.

நாகரிகங்களிடை மோதல், பனிப் போர் உள்ளிட்ட பழைய கருத்துக்களைக் கடந்துச் சென்று, “ஷாங்காய் குறிக்கோள்”சர்வதேச உறவில் புதிய பக்கத்தைத் திறந்து வைத்துள்ளது என்று ஷிச்சின்பிங் தனது உரையில் தெரிவித்தார்.

12:14

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உருவாக்கப்பட்ட 17 ஆண்டுகளில்
நிறைய சாதனைகளைப் பெற்றுள்ளது. பல்வேறு உறுப்பு நாடுகள், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சாசனம், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் நீண்டகால அண்டை நாட்டு நட்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஆகிய இரண்டு ஆவணங்களின் படி, அணிசேரா, எதிர்ப்பற்ற மற்றும் மூன்றாவது தரப்புக்கு எதிராக இல்லாத ஆக்கப்பூர்வ கூட்டாளி உறவை உருவாக்கி வருகின்றன என்று சீன அரசுத்தலைவர் ஷி ச்சின்பிங் 10ஆம் நாள் தெரிவித்தார். இது, சர்வதேச உறவின் தத்துவம் மற்றும் நடைமுறையாக்கத்தில் முக்கிய புத்தாக்கமாகும்.
பிரதேச ஒத்துழைப்புக்கு புதிய மாதிரியை உருவாக்கி, இப்பிரதேசத்தின் அமைதி மற்றும் வளர்ச்சியில் இது புதிய பங்காற்றி வருகிறது என்றும் ஷி பாராட்டினார்.


11:22

சிறிய அளவிலான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்த பிறகு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 18ஆவது உச்சி மாநாட்டின் பெரிய அளவிலான பேச்சுவார்த்தை இன்று காலை(ஜன் 10ஆம் நாள்) நடைபெறத் துவங்கியது.

ஆப்கானிஸ்தான், பெலாரஸ், ஈரான், மங்கோலியா ஆகிய பார்வையாளர் நாடுகள் மற்றும் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இதில் முக்கிய உரை நிகழ்த்துத்தினார்.

11:02

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டின் வரவேற்பு விருந்து 9ஆம் நாளிரவு ட்சிங் தாவ் நகரில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், இம்மாநாட்டில் கலந்து கொள்கின்ற அனைத்து நாடுகளின் தலைவர்களுக்கும், சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்களுக்கும் வரவேற்பைத் தெரிவித்தார்.

10:58

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும் இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடியும் சனிக்கிழமை(ஜுன் 9ஆம் நாள்)ட்சிங்தாவில் பேச்சுவார்த்தையை நடத்தினர்.


10:55

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு ஜுன் 9, 10 ஆகிய நாட்களில் ட்சிங்தாவில் நடைற்று வருகிறது. 9ஆம் நாள் இரவில், “விளக்குகள் மற்றும்  வாணவேடிக்கை”கலை நிகழ்ச்சி ட்சிங்தாவ் நகரில் அரங்கேற்றப்பட்டது.


10:21

புதிய உறுப்பு நாடுகள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இணந்தபிறகு, 8 உறுப்பு நாடுகள் ட்சிங் தாவ் உச்சி மாநாட்டில் முதல்முறையாக கூட்டாக கலந்து கொண்டன என்று சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஜூன் 10ஆம் நாள் தெரிவித்தார்.

குறிப்பாக, இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் அரசுத் தலைவர் மம்னூன் ஹுசைன் ஆகியோர் முதல்முறையாக, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாட்டுத் தலைவராக, இவ்வுச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு ஷி ச்சின்பிங் வரவேற்பு தெரிவித்தார்.


10:16

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்அடையாளச் சின்னம் (எஸ்சிஓ)

09:39

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 18ஆவது உச்சி மாநாடு, 10ஆம் நாள் காலை சீனாவின் ஷான்டொங் மாநிலத்தின் ட்சிங்தாவில் துவங்கியது.  சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இம்மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். ரஷியா, கசகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.

திட்டப்படி,  எட்டு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் முதலில் சிறிய அளவிலான பேச்சுவார்த்தையை நடத்துவர். பின்பு, பார்வையாளர் நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களுடன் இணைந்து, பெரிய அளவிலான பேச்சுவார்த்தையை நடத்தவர்.

பேச்சுவார்த்தைக்கு பிறகு, “ட்சிங்தாவ் அறிக்கை”கையெழுத்திடப்பட்டு வெளியிடப்படும்.


அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்