சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் பெய்ஜிங் உச்சி மாநாடு

2018-09-04 08:51:51
Comment
பகிர்க
பகிர்க Close
Messenger Messenger Pinterest LinkedIn
08:51

சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் 2018 பெய்ஜிங் உச்சிமாநாட்டின் துவக்க விழா, 3ஆம் நாள் மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்றது. 

08:51


சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் 2018 பெய்ஜிங் உச்சிமாநாட்டின் துவக்க விழா, 3ஆம் நாள் மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்றது. 

18:57

அமைதி மற்றும் பாதுகாப்பு, அமைதிக்காப்பு உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்புக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, சீன-ஆப்பிரிக்க அமைதி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு நிதியத்தை  உருவாக்க சீனா முடிவெடுத்துள்ளது.

18:55

ஆப்பிரிக்காவுடன் நாகரிகங்களின் பரிமாற்றத்தையை வலுப்படுத்தும் வகையில், சீன-ஆப்பிரிக்க ஆய்வுக் கழகத்தை நிறுவ சீனா முடிவெடுத்துள்ளது.

18:55

மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறைகளில் 50 உதவித் திட்டங்களை மேம்படுத்த சீனா முடிவெடுத்துள்ளது. இதனிடையில், ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாட்டு மையத்தின் தலைமையகம், சீன-ஆப்பிரிக்க  நட்புறவு மருத்துவமனை உள்ளிட்ட முக்கியத் திட்டங்களின் கட்டுமானப் பணி தொடங்கப்படும்.

18:55

ஆப்பிரிக்காவில் ‘லு பான்’ எனும் தொழில்திறன் மேம்பாட்டுக் களங்களை சீனா அமைக்கும். இந்த முயற்சியின் மூலம், ஆப்பிரிக்க இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சி அளிக்கப்படும். மேலும், சீன அரசின் உதவித் தொகையுடன் கல்வி பெறுவதற்கான 50ஆயிரம் வாய்ப்புகளையும், பயிற்சிக்கான 50ஆயிரம்  வாய்ப்புகளையும் சீனா ஆப்பிரிக்காவுக்கு அளிக்கும்.

18:53

வரும் 3 ஆண்டுகளிலும் எதிர்காலத்திலும் ஆப்பிரிக்காவில் தூய்மையான வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான 50 திட்டங்களை சீனா செயல்படுத்தும். காலநிலை மாற்ற சமாளிப்பு, கடல் ஒத்துழைப்பு, பாலைவனமாதல் தடுப்பு, வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் பாதுகாப்பு ஆகிய துறைகளில் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், இந்த 50 திட்டங்கள் நடைமுறைக்கு வரும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

18:52

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் செப்டம்பர் 3ஆம் நாள் பேசுகையில், 2030ஆம் ஆண்டுக்குள் தானிய பாதுகாப்பை ஆப்பிரிக்கா அடிப்படையில் நனவாக்குவதற்கு சீனா ஆதரவு அளிக்கிறது. ஆப்பிரிக்காவுடன் இணைந்து, சீன-ஆப்பிரிக்க வேளாண்மை நவீன ஒத்துழைப்புத் திட்டம் மற்றும் செயல் திட்டத்தை வகுத்துச் செயல்படுத்த சீனா விரும்புகிறது. ஆப்பிரிக்காவில் வேளாண்மைக்கான 50 உதவி திட்டப்பணிகளை சீனா செயல்படுத்தும். மேலும், இயற்கை இன்னல்களால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு 100 கோடி யுவான் மதிப்புள்ள மனித நேய உதவியைச் சீனா வழங்கும். தவிர, ஆப்பிரிக்காவுக்கு 500 உயர் நிலை வேளாண்மை நிபுணர்களை அனுப்பி, வேளாண் துறையில் இளம் திறமைசாலிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும். அத்துடன், சீன-ஆப்பிரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தகப் பொருட்காட்சி சீனாவில் உருவாக்கப்படும். அதேவேளை, பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு மண்டலங்கள் ஆப்பிரிக்காவில் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்படும் என்றார் அவர். 

18:51

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் செப்டம்பர் 3ஆம் நாள் பேசுகையில், ஆப்பிரிக்காவிலிருந்து வணிகப் பொருட்களின் இறக்குமதியைச் சீனா விரிவுபடுத்தும். சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியில் ஆப்பிரிக்க நாடுகள் கலந்து கொள்வதற்குச் சீனா ஆதரவு அளிக்கிறது. மேலும், ஆப்பிரிக்காவில் தடையற்ற 50 வர்த்தகத் திட்டப்பணிகளை சீனா செயல்படுத்தும். தவிர, ஆப்பிரிக்காவில் சுதந்திர வர்த்தக மண்டலத்தின் கட்டுமானத்துக்கும் சீனா ஆதரவு அளிக்கிறது. விரும்பும் கொண்ட ஆப்பிரிக்க நாடு மற்றும் பிரதேசங்களுடன், சுதந்திர வர்த்தகம் பற்றிய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நடத்தி, சீன-ஆப்பிரிக்க மின்னணு வணிக அலுவல் ஒத்துழைப்பை முன்னேற்ற சீனா விரும்புகிறது என்றார் அவர். 

18:39

ஆப்பிரிக்க நாடுகளுடன் நெருக்கமாக ஒத்துழைத்து, அடுத்த 3 ஆண்டுகளில் 8 துறைகளில் முக்கியமான நடவடிக்கைகளை சீனா மேற்கொள்ளும் என்று ஷி ச்சின்பிங் அறிவித்துள்ளார்.

தொழில்துறை முன்னேற்றம், வசதிகளின் இணைப்பு, வர்த்தகம், பசுமை வளர்ச்சி, ஆற்றல் கட்டுமானம், சுகாதாரம், பண்பாட்டுத் துறை பரிமாற்றம், அமைதி மற்றும் பாதுகாப்புத் துறை ஒத்தழைப்பு ஆகியவை இவற்றில் அடங்கும். இதற்காக, அரசு நிதியுதவி, நிதி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் முதலீடு முதலிய வழிமுறைகளில் சீனா ஆப்பிரிக்காவுக்கு 6000 கோடி அமெரிக்க டாலர் உதவியை வழங்க உள்ளது. 

18:38

2015ஆம் ஆண்டு சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் ஜோஹன்னஸ்பார்க் உச்சி மாநாட்டிற்கு பிறகு,  இரு தரப்புகளுக்கிடையே 10 பெரிய ஒத்துழைப்புப்  திட்டங்களை சீனா விரிவாக நடைமுறைப்படுத்தி வருகிறது. 6,000 கோடி அமெரிக்க டாலர் நிதி ஆதரவு அளிக்கும் வாக்குறுதி நிறைவேற்றுப்பட்டுள்ளது. இதனிடையில், இருப்புப் பாதை, நெடுஞ்சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு மண்டலங்கள் ஆகியவை அடுத்தடுத்து கட்டியமைக்கப்பட்டு வருகின்றன. அறிவியல், கல்வி, வறுமை குறைப்பு ஆகிய துறைகளிலான ஒத்துழைப்புப் பணிகளும் செயலுக்கு வந்துள்ள.


17:45

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் செப்டம்பர் 3ஆம் நாள் பேசுகையில், ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றி கொண்ட ஒரு தனிச்சிறப்பு மிக்க வளர்ச்சிப் பாதையை சீனாவும், ஆப்பிரிக்காவும் மேற்கொண்டு வருகின்றன. ஆப்பிரிக்க நாடுகள், தங்களது நாட்டின் நிலைமைக்குப் பொருந்திய வளர்ச்சிப் பாதைக்கான ஆராய்ச்சியிலும், ஆப்பிரிக்காவின் உள் விவகாரங்களிலும் சீனா தலையிடாது. மேலும், ஆப்பிரிக்காவின் மீது சீனாவின் கருத்துகள் வலுக்கட்டாயமாகத் திணிக்க மாட்டோம். மூன்றாவதாக, ஆப்பிரிக்காவுக்கு உதவியளிக்கும் போது, அரசியல் நிபந்தனையை அதிகரிக்க மாட்டோம். தவிர, ஆப்பிரிக்காவில் முதலீடு செய்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் ஈட்ட மாட்டோம் என்றார் அவர். 

17:21

அமைதி மற்றும் வளர்ச்சியே, இன்றைய காலத்தின் ஓட்டமாகும் என்று சீனா நம்புகிறது. வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையை உறுதியுடன் கடைப்பிடிக்கவும்,திறந்த நிலை உலகப் பொருளாதாரம் மற்றும் பலதரப்பு வர்த்தக அமைப்புமுறையை உறுதியாகப் பேணிக்காக்கவும் சீனா பாடுபட்டு வருகிறது. அதேசமயத்தில், பாதுகாப்புவாதம் மற்றும் ஒருதரப்பு வாதத்தை சீனா எதிர்க்கிறது என்று ஷிச்சின்பிங் தனது  உரையில் மீண்டும் தெளிவுபடுத்தினார்.

17:01

தற்போது வரை, 53 ஆப்பிரிக்க நாடுகளுடன் தூதரக உறவை சீனா நிறுவியுள்ளது. 24 ஆப்பிரிக்க நாடுகளுடன் விரிவான நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளி உறவு போன்ற பல்வகை கூட்டுறவுகளை சீனா உருவாக்கியுள்ளது.


17:01

சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் 2018 பெய்ஜிங் உச்சி மாநாட்டின் துவக்க விழா திங்கள்கிழமை மாலை பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இதில் முக்கிய உரைநிகழ்த்துகிறார்.

ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி அடைந்து, மேலும் நெருக்கமான பொது சமூகத்தை இணைந்து சமூகத்தை உருவாக்குவது என்ற தலைப்பில், இந்த உச்சி மாநாட்டில் பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்படும். வரும் 3 ஆண்டுகளில் சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் முக்கியமான அம்சங்கள் வகுக்கப்படும்.


அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்