சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி துவக்க விழா

2018-11-05 14:41:28
Comment
பகிர்க
பகிர்க Close
Messenger Messenger Pinterest LinkedIn
14:41

முதலாவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி இன்று காலை துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இத்துவக்க விழாவில் பங்கேற்று,  புதுமை மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய திறந்த உலகப் பொருளாதாரத்தை கூட்டாக உருவாக்குவது என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்.

11:09

ஷாங்காய் உள்ளிட்ட பகுதிகளில் திறப்பை விரிவாக்குவதற்கான 3 முக்கியக் கொள்கைகளை ஷிச்சின்பிங் அறிவித்தார்.

ஷாங்காய் தடையில்லா வர்த்தக முன்னோடி மண்டலத்தின் புதிய பகுதியை கூடுதலாக அமைப்பது, ஷாங்காய் பங்கு சந்தையில் அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கப் பிரிவை நிறுவுதல், ஷாங்காய், சேஜியாங், ஜியாங் ஆகிய யாங்சி ஆற்றின் கழிமுகப் பிராந்தியத்தின் வளர்ச்சியை தேசிய திட்டமாக முன்னெடுத்தல் ஆகியவைகள் மூன்று கொள்கைகள் ஆகும்.

11:05

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் நவம்பர் 5ஆம் நாள் பேசுகையில், பிற முக்கிய நாடுகளுடன் ஒப்பிடும் போது, சீனப் பொருளாதார அதிகரிப்பு, உலக அளவில் முன்னணியில் உள்ளது. நீண்டகாலச் சீரான பொருளாதார வளர்ச்சிக்கான பல சாதகமான காரணிகள் சீனாவில் உள்ளன. மேலும், சீனாவின் பொருளாதாரம் என்பது ஒரு குளம் போன்ற சாதாரண நீர்நிலை அல்ல. கடல் போன்றது. கடும் காற்று, மழை எவற்றாலும் அதனை அழிக்க முடியாது. அதனால், உயர் தரம் கொண்ட வளர்ச்சிப் பாதையில் சீனப் பொருளாதாரம் விரைவில் நுழைவது உறுதி என்றார்.

11:05

உலகளவில் முதல் தர வணிகச் சூழ்நிலையை உருவாக்கும் வகையில், வெளிநாட்டு வணிகர்களின் சட்டப்பூர்வ உரிமை நலன்களைப் பாதுகாத்து, அறிவுசார் சொத்துரிமை மீறில் செயல்களுக்கு சீனா சட்டப்படி உறுதியான தண்டனை விதிக்கும். அதோடு, தண்டனையாக ஈடு செய்யும் அமைப்பு முறை அமலாக்கப்படும். இதனால் சட்ட மீறலுக்கான செலவு பெரிதும் அதிகரிக்கும்.

11:04

எதிர்வரும் 15 ஆண்டுகளில், சீனா இறக்குமதி செய்யும் சரக்கு மற்றும் சேவையின் மதிப்பு தலா, 30 இலட்சம் கோடி மற்றும் 10 இலட்சம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டும் என்று ஷிச்சின்பிங் 5ஆம் நாள் ஷாங்காயில் தெரிவித்தார்.

இறக்குமதி வாய்ப்பை அதிகரித்தல், சந்தை நுழைவை தளர்த்துதல், தொழில் புரிவதற்கான சர்வதேச நிலை சூழல்களை உருவாக்குதல், உள்ளிட்ட 5 துறைகளில் சீனா திறப்பு நிலையை விரிவாக்கி வருகிறது.

 

10:55

உலகளவில் முதல் தர வணிகச் சூழ்நிலையை உருவாக்கும் வகையில், வெளிநாட்டு வணிகர்களின் சட்டப்பூர்வ உரிமை நலன்களைப் பாதுகாத்து, அறிவுசார் சொத்துரிமை மீறில் செயல்களுக்கு சீனா சட்டப்படி உறுதியான தண்டனை விதிக்கும். அதோடு, தண்டனையாக ஈடு செய்யும் அமைப்பு முறை அமலாக்கப்படும். இதனால் சட்ட மீறலுக்கான செலவு பெரிதும் அதிகரிக்கும்.

10:51

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் நவம்பர் 5ஆம் நாள் பேசுகையில், திறப்பு, தற்போதைய சீனாவின் தெளிவான ஓர் அடையாளமாகும். திறப்புப் பணியை இடைவிடாமல் விரிவுபடுத்தி வருகின்ற சீனா,  சொந்தமாக வளர்ச்சியடையும் அதேவேளை, உலகத்துக்கும் நன்மை புரிந்து வருகிறது. திறப்புப் பணியை மேலும் உயர் நிலைக்கு முன்னேற்றுவது, திறப்புத் தன்மை வாய்ந்த உலகப் பொருளாதாரத்தை வளர்ப்பது, மனிதக் குலத்துக்கான பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்குவது  ஆகிய மூன்று துறைகளில் சீனாவின் முயற்சிகள் ஒருபோதும் நிறுத்தப்படாது என்றார்.

10:30

திறப்பு மற்றும் தொடர்பில் ஊன்றி நின்று, ஒன்றுக்கொன்று நலன் தரும் ஒத்துழைப்பு வாய்ப்பை விரிவாக்க வேண்டும்; புத்தாக்கத்தின் தலைமைப் பங்கைக் கடைப்பிடித்து, இயக்காற்றலின் மாற்றத்தை விரைவுப்படுத்த வேண்டும்; அனைத்தையும் உள்ளடக்கிய பொது நலன் முறைமையைப் பின்பற்றி, கூட்டு வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஷாங்காயில் மூன்று அம்சக் கருத்துக்களைத் தெரிவித்து, பல்வேறு நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

10:27

தன்னுடைய உரையில், பல்வேறு நாடுகள், பெரிய துணிவுடன் செயல்பட்டு, திறப்பையும் ஒத்துழைப்பையும் ஆக்கமுடன் முன்னேற்றி, கூட்டு வளர்ச்சியை நனவாக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் வேண்டுகோள் விடுத்தார்.

10:13

தற்போது வரை உலக நாடுகளில் காணப்பட்ட முதல் தேசிய நிலை இறக்குமதிப் பொருட்காட்சி, சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியாகும். இது, சர்வதேச வர்த்தக வளர்ச்சி வரலாற்றில் பெரிய நிகழ்வாகும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

புதிய சுற்று உயர் நிலை வெளிநாட்டுத் திறப்பை முன்னெடுப்பதற்கான முக்கியத் தீர்மானமாகவும், முனைப்புடன் உலகிற்கு சந்தையைத் திறப்பதற்கான முக்கிய நடவடிக்கையாகவும் இப்பொருட்காட்சி திகழ்கிறது. பலதரப்பு வர்த்தக அமைப்புமுறையை ஆதரித்து, தடையில்லா வர்த்தக வளர்ச்சியை முன்னேற்றும் சீனாவின் நிலைப்பாட்டை இது பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார்.


10:12

முதலாவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி இன்று காலை துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இத்துவக்க விழாவில் பங்கேற்று,  புதுமை மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய திறந்த உலகப் பொருளாதாரத்தை கூட்டாக உருவாக்குவது என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்.

09:58

முதலாவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி நடைபெறும் கண்காட்சி மையம்

09:54

முதலாவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி  நவம்பர் 5 முதல் 10ஆம் நாள் வரை ஷாங்காயில் நடைபெறுகிறது.

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்