சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியின் 40ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம்

2018-12-18 12:28:53
Comment
பகிர்க
பகிர்க Close
Messenger Messenger Pinterest LinkedIn
12:28

“ஒரு நாட்டில் இரண்டு அமைப்பு முறைகள்”, ஹாங்காங் மக்கள் ஹாங்காங்கை நிர்வாகிப்பது, மகாவ் மக்கள் மகாவை நிர்வாகிப்பது ஆகிய கொள்கைகளை;d சீனா சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதோடு, ஒரே சீனா என்ற கோட்பாட்டிலும், “1992ஆம் ஆண்டு பொது கருத்திலும்”ஊன்றி நின்று, இருகரையுறவை முன்னேற்ற வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

12:28

சீர்திருத்தத்துக்கும் வளர்ச்சிக்கும் இடையேயான நிதான உறவைச் சீனா சீராகவும் சரியாகவும் கையாள வேண்டும். சீனா, ஒரு பெரிய நாடாகும். அடிப்படைத் தன்மை வாய்ந்த பிரச்சினைகளில் தலைகீழான தவறுகளைச் சீனா ஒரு போதும் செய்ய கூடாது. அதோடு, பல்வேறு முக்கிய சீர்திருத்த நடவடிக்கைகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

12:28

வெளிநாட்டுத் திறப்புப் பணியை விரிவாக்குவதில் சீனா கட்டாயமாக ஊன்றி நின்று, மனிதத் தலைவிதி பொதுச் சமூகத்தைக் கூட்டாக்க் கட்டியமைப்பதை இடைவிடாமல் முன்னேற்ற வேண்டும். சீனா, ஒன்றுக்கு ஒன்று மதிப்பளிக்கும், நேர்மையான, ஒத்துழைப்பு மேற்கொண்டு கூட்டு நலன் பெறும் புதிய ரக சர்வதேச உறவை உருவாக்கும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

இதர நாடுகளின் நலனைப் பாதிப்பதன் மூலம், சொந்த வளர்ச்சியை சீனா நனவாக்காது. அதோடு, தன் நாட்டுக்குரிய சரியான நலனை சீனா ஒருபோதும் கைவிடாது என்பதை அவர் வலியுறுத்தினார்.

12:28

வளர்ச்சி சீனாவின் முக்கியக் கடமையாகும். வளர்ச்சி வழிமுறையை ஆக்கப்பூர்வமாக மாற்றி, பொருளாதார கட்டமைப்பை மேம்படுத்தி, புத்தாக்கத்தின் மூலம் வளர்ச்சியை முன்னேற்றுவிக்கும் நெடுநோக்கை நடைமுறைப்படுத்தி, உயிரின வாழ்க்கை நாகரிக்க் கட்டுமானத்தை வலுப்படுத்த வேண்டும் என்று ஷிச்சின்பிங் கூறினார்.

12:27

சீனாவின் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி, சீனத் தனிச் சிறப்பு வாய்ந்த சோஷலிச அமைப்புமுறையை மேம்படுத்தி வளர்ப்பதற்கும், தேசிய மேலாண்மை அமைப்புமுறையையும், மேலாண்மை ஆற்றலின் நவீனமயமாக்கத்தையும் விரைவுபடுத்தும் பொது நோக்கத்துக்கும் ஏற்ற அடிப்படை வரைமுறையைக் கொள்ள வேண்டும். சீர்திருத்தம் செய்யப்பட வேண்டிய அம்சங்களை உறுதியாக சீர்திருத்த வேண்டும். சீர்திருத்தப்பட முடியாத அம்சங்களை சீனா உறுதியாக மாற்றக் கூடாது என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

12:11

சீனாவின் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி மனித முதன்மை என்ற வளர்ச்சி சிந்தனையில் ஊன்றி நிற்க வேண்டும். மக்கள் அருமையான வாழ்க்கையை கண்டறிய உதவுவது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய கடமையாகும். மேலும், மக்களின் தேவையை நிறைவு செய்து, வளர்ச்சி சாதனைகளைக் கூட்டாக அனுபவிக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

12:10

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் 18ஆம் நாள் கூறுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை அசையாமல் நிலைநிறுத்துவது முக்கிய கோட்பாடாகும் என்று குறிப்பிட்டார். மேலும் ஆட்சி மற்றும் தலைமை ஆற்றலை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உயர்த்தி, சீனாவின் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியை முன்னேற்றுவதற்கான சரியான திசையை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

11:19

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின் பிங், 18ஆம் நாள், சீன சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு பணியின் 40ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்ட நடவடிக்கையில், பேசுகையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவியது, நவ சீனாவை உருவாக்கியது, சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்புப் பணியை முன்னேற்றி சீன தனிச்சிறப்புடைய சோஷலிச இலட்சியத்தை உருவாக்கியது ஆகியவை, 1919ஆம் ஆண்டுக்கு பிறகு சீனாவில் நடைபெற்ற 3 முக்கிய நிகழ்வுகளாகும் என்றும் சீனா மறுமலர்ச்சியை நனவாக்கிய 3 முக்கிய மைல் கள் இவை என்றும் குறிப்பிட்டார்.

11:09

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி மற்றும் சீன அரசவை 18ஆம் நாள் அலெய்ன் மேரியக்ஸ் உள்ளிட்ட 10 சர்வதேச நண்பர்களுக்குச் சீன சீர்திருத்த நட்பு விருதினை வழங்கின. வெளிநாட்டு பரிமாற்ற ஒத்துழைப்பில் அவர்கள் நீண்டகாலமாகச் செயல்பட்டு, சீனச் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் முன்போக்கில் ஆழமாகப் பங்கெடுத்து, சிறப்பாகச் செயலாற்றியமைக்காக அவர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

10:24

சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணியின் 40ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்ட மாநாடு 18ஆம் நாள் காலை பெய்ஜிங்கில் சிறப்பாகத் தொடங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், சீன அரசுத் தலைவரும், மத்திய ராணுவக் கமிட்டியின் தலைவருமான ஷிச்சின்பிங் இம்மாநாட்டில் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார்.

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்