நேரடி ஒலிபரப்பு: உலக தோட்டக்கலை பொருட்காட்சியின் துவக்க விழா

2019-04-28 21:20:57
Comment
பகிர்க
பகிர்க Close
Messenger Messenger Pinterest LinkedIn
21:20

2019ஆம் ஆண்டுக்கான உலகத் தோட்டக் கலை பொருட்காட்சியின் துவக்க விழா 28ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை பெய்ஜிங்கின் யான்ச்சிங் மாவட்டத்தில் துவங்கியது. 

21:01

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையைக் கூட்டாக உருவாக்குவதில்,  திறப்பு மற்றும் வளர்ச்சிப் பாதை அமைக்கப்பட வேண்டும். அதேசமயத்தில், தூய்மையான வளர்ச்சிப் பாதையாகவும் இது இருக்க வேண்டும்  என்றும், பல்வேறு நாடுகளுடன் இணைந்து, அழகான புவித் தாயகத்தைக் கூட்டாக அமைக்க சீனா விரும்புகிறது என்றும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

20:53

பல்வேறு நாடுகள் கையோடு கை கோர்த்து ஒத்துழைப்பதன் மூலம் மட்டுமே, காலநிலை மாற்றம், கடல் மாசுபாடு, உயிரினங்கள் பாதுகாப்பு உள்ளிட்ட உலகளாவிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியும் என்று ஷிச்சின்பிங் கூறினார்.

அழகான தாயகத்தை கட்டியமைப்பது, மனித குலத்தின் பொதுக் கனவு ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.

20:53

உயிரின வாழ்க்கைச்  சூழலை மேம்படுத்துவது என்பது,   உற்பத்தித் திறனை வளர்ப்பதாகும். தூய்மையான நீரும் பசுமையான மலைகளும், தங்க சுரங்கங்களாகும். பசுமையான வளர்ச்சி மற்றும் செழுமையை மக்கள்  பின்பற்றி,  பொருளாதார மற்றும் சமூகத்தின் தொடரவல்ல வளர்ச்சியை நனவாக்க வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.

20:52

மனிதர்கள் புவி மண்டலத்தின் ஒட்டுமொத்த சமநிலையைப் பேணிக்காத்து, அடுத்த தலைமுறையினர்கள் செழிப்பான பொருட்களைப் பெறும் அதேவேளை, நட்சத்திரங்கள் மிளிரும் வானம் மற்றும் பசுமையான மலைகளைக் கண்டுகளிக்கவும், மலர்களின் நறுமணத்தை சுவாசிக்கச் செய்யவும் வேண்டும் என்று ஷிச்சின்பிங் வேண்டுகோள் விடுத்தார்.

20:47

மக்கள் சொந்த கண்களைப் பாதுகாப்பதைப் போல், உயிரினச்சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்றும், உயிரை மதிப்பதைப் போல், உயிரினச்சுற்றுச்சூழலை மதிக்க வேண்டும் என்றும் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஏப்ரல் 28ஆம் நாள் வேண்டுகோள் விடுத்தார்.

20:43

சீனாவில் உயிரின வாழ்க்கைச் சூழல் கட்டுமானம், விரைவாக வளரும் கட்டத்தில் நுழைந்துள்ளது. இதனிடையில், நீல வானத்தையும், பசும் மலையையும், தூய்மையான நீரையும் உடைய அழகிய சீனாவை உருவாக்குவதே, சீன மக்கள் எதிர்பார்ப்புடன் போராடும் இலக்கு ஆகும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

 

20:43

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் பேசுகையில், மக்கள் இயற்கைக்கு மதிப்பு அளித்து, இயற்கையுடன் இணைந்து, இனிமையான வாழ்க்கையை நாடுவது, நடப்பு பொருட்காட்சியின் நோக்கமாகும். தூய்மையான வளர்ச்சி என்ற கருத்தினை, உலகின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் பரவல் செய்ய வேண்டுமென விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

20:10

2019ஆம் ஆண்டுக்கான உலகத் தோட்டக் கலை பொருட்காட்சியின் துவக்க விழா 28ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை பெய்ஜிங்கில் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

பசுமையான வாழ்க்கை முறையும் அழகான தாயகமும் என்ற தலைப்பிலான இப்பொருட்காட்சியில், 110 நாடுகள் மற்றும் சர்வேதச அமைப்புகள் பங்கேற்கின்றன.


அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்