ஆசிய நாகரிகங்களுக்கிடையிலான உரையாடல் மாநாட்டின் துவக்க விழா

2019-05-15 11:34:15
Comment
பகிர்க
பகிர்க Close
Messenger Messenger Pinterest LinkedIn
11:34

உலகம் மற்றும் ஆசிய நாகரிகங்களில் ஒன்றாக சீன நாகரிகமும் திகழ்கிறது. பண்டைக்காலம் தொட்டு, தொடர்ந்து வளர்ந்து வரும் சீன நாகரிகம். சீனத் தேசிய எழுச்சியை வெளிக் கொண்டு வருகின்றது என்று சீன அரசு தலைவர் ஷிச்சின்பிங் கூறினார்.

11:32

கால வளர்ச்சிக்கேற்ப, நாகரிகம் தொடர்ச்சியாக வளர்ந்து வருகின்றது. அதன் வளர்ச்சிப் போக்கில் நிலைத்தன்மையும், ஈர்ப்பும் வாய்ந்த நாகரிகச் சாதனைகளை இடைவிடாமல் உருவாக்க வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தெரிவித்தார். பல்வேறு நாடுகளுடன் ஆசியச் சுற்றுலா பரவல் திட்டத்தை நடைமுறைப்படுத்தச் சீனா விரும்புகின்றது. ஆசிய பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தி, ஆசிய நாடுகளின் மக்களுக்கிடையிலான நட்புறவை அதிகரிப்பதற்கு பங்காற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

11:32

நாகரிகம் வளர்ச்சியை பெற வேண்டும். பல்வேறு நாகரிகங்களுக்கிடையிலான பரிமாற்றம் நாகரிக வளர்ச்சியைத் தூண்டுவதற்குரிய காரணிகளுள் ஒன்றாகும். ஆனால், இது சமத்துவம், பன்முகத்தன்மை, குறுக்கு வெட்டுத் தன்மை ஆகியவற்றை உள்ளடக்கிய நிலையில் இருக்க வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் கூறினார்.

11:30

பல்வேறு நாகரிகங்களிடையே மோதல் இல்லை. ஆசிய நாடுகள், நடப்பு நாட்டு நாகரிகத்தின் உயிர் ஆற்றலை முழுமையாக்கி, பிற நாடுகளின் நாகரிக வளர்ச்சிக்குரிய நிலைமையை உருவாக்க வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தெரிவித்தார். தொடர்புடைய நாடுகளுடன் இணைந்து, நாகரிகப் பரவலை அதிகரிக்கும் வகையில் ஒன்றுக்கு ஒன்று பரிமாற்றம் மேற்கொள்வதற்கான மேடையை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

11:28

நாகரிகப் பரிமாற்றம் மற்றும் பகிர்வு என்ற அடிப்படையில், ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து, நாகரிகங்களுக்கிடையிலான வேற்றுமைகளை ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் ஒவ்வொரு நாகரிகமும், தனித்த மதிப்பு வாய்ந்தது. சீனா பல்வேறு நாடுகளுடன் சேர்ந்து, ஆசியப் பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, நாகரிகம் மேலும் நன்றாகப் பரவல் செய்யப்படுவதற்கு ஆதரவளிக்க விரும்புவதாகவும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

11:28

உலகின் பல்வேறு நாடுகள், தேசிய இனங்கள், பண்பாடுகள் பரிமாற்றம் மேற்கொண்டு, ஒன்றிடமிருந்து மற்றொன்று கற்றுக்கொண்டு, ஆசிய பொது சமூகம், மனிதக் குலத்தின் பொது சமூகம் முதலியவற்றுக்குரிய பண்பாட்டு அடிப்படையை வலுப்படுத்த வேண்டும். பன்முகத் தன்மையின் வழி, நாகரிகத்தைப் பரிமாறிகொண்டு, அதன் மூலம் நாகரிக வளர்ச்சி அடையலாம் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 15ஆம் நாள் வேண்டுகோள் விடுத்தார்.

11:26

ஆசியாவின் பல்வேறு நாடுகள் ஒத்த வரலாற்று நிலைமையையும் வளர்ச்சி திட்டத்தையும் கொண்டு வருகின்றன. ஆசிய மக்களின் அருமையான வாழ்க்கை மீதான எதிர்ப்பார்ப்பை நனவாக்கபாடுபட வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

ஆசிய மக்கள் ஆசியாவின் அமைதி, வளர்ச்சி மற்றும் திறப்பு ஆகியவற்றை நாடி வருகின்றனர். ஆசியாவின் பல்வேறு நாடுகளும் ஒன்றுக் கொன்று மதிப்பு அளித்து, கூட்டு மனப்பான்மையுடன் சுமுகமாக வாழ்ந்து, பொருளாதார உலகமயமாக்கத்தைத் தூண்ட வேண்டுமென ஷிச்சின்பிங் வேண்டுகோள் விடுத்தார்.

11:20

ஆசிய நாடுகள், நாகரிக தன்னபிக்கையை வலுப்படுத்த வேண்டும். உலகிலுள்ள பிற நாகரிகங்களுடனான பரிமாற்றத்தில் ஊன்றி நிற்க வேண்டும். நாகரிகத் துறையில் ஆசிய நாடுகள் பிரகாசமான சாதனைகளை உருவாக்கப் பாடுபட வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 15ஆம் நாள் தெரிவித்தார். ஆசிய நாகரிகம், உலக நாகரிகத்துடனான தொடர்பில் இடைவிடாமல் வளர்ந்து, உலக நாகரிகத்துக்குச் செழுமையான நாகரிகத் தேர்வுகளை வழங்கியுள்ளது.

11:09

ஆசிய நாகரிகங்களுக்கிடையிலான உரையாடல் மாநாடு 15ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் இம்மாநாட்டில் உரை நிகழ்த்தினார். பொது அறை கூவல்களைச் சமாளிப்பதில், பொருளாதாரம் மற்றும் அறிவியல் தொழில் நுட்ப ஆற்றல் மட்டுமல்லாது, பண்பாடு மற்றும் நாகரிக ஆற்றலும் மனித குலத்துக்குத் தேவைப்படுகின்றது என்று அவர் தெரிவித்தார்.

ஆசியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளின் நாகரிகங்கள், ஒன்றுக்கொன்று பரிமாற்றம் செய்து, கற்றுக்கொள்வதற்கு உரிய புதிய மேடையை இம்மாநாடு வழங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்