சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம்

2019-10-15 15:26:29
Comment
பகிர்க
பகிர்க Close
Messenger Messenger Pinterest LinkedIn
21:47

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 70ஆவது ஆண்டு நிறைவின் முன்னிட்டு அக்டோபர் முதல் நாளிரவு பெய்ஜிங் மாநகரில் கலை நிகழ்ச்சிகளும் வாணவேடிக்கைகளும் சிறப்பாக நடைபெற்றன.

பல்லாயிரக்கணக்கான மக்கள் 90 நிமிடங்கள் நீடித்த இந்நிகழ்வில் பங்கெடுத்தனர்.

21:33

பெய்ஜிங்கின் இரண்டாவது வெளிநாட்டு மொழி கல்லூரியைச் சேர்ந்த 40க்கும் மேலான மாணவர்கள், இரண்டு திங்கள் கடினமாண பயிற்சிக்குப் பிறகு, அக்டோபர் முதல் நாள், பெய்ஜிங்கின் தியன் அன் மென் சதுக்கத்தில் நடைபெற்ற தேசிய விழா கொண்டாட்டத்தில் உருள் சக்கர கலை நிகழ்ச்சியை அரங்கேற்றினர்.

21:31

அக்டோபர் முதல் நாள், சீன மக்கள் குடியரசின் பிறந்த நாள். இதனை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு பெய்ஜிங் மாநகர மையத்தில் கலை நிகழ்ச்சிகளும் வாணவேடிக்கைகளும் சிறப்பாக நடைபெற்றன.

விழாக் கோலம் பூண்டு விளங்கிய தியன் அன் மன் சதுக்கத்தில் வாணவேடிக்கைகள் இரவு வானத்தில் பல அழகான காட்சிகளை அளித்தன.


21:07

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 70ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு அக்டோபர் முதல் நாளிரவு பெய்ஜிங் மாநகரில் கலை நிகழ்ச்சிகளும் வாணவேடிக்கைகளும் சிறப்பாக நடைபெற்றன.

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் உள்ளிட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாட்டுத் தலைவர்கள் பொது மக்களுடன் நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்து மகிழ்ந்தனர்.

21:01

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 70ஆவது ஆண்டு நிறைவின் முன்னிட்டு அக்டோபர் முதல் நாளிரவு பெய்ஜிங் மாநகரில் கலை நிகழ்ச்சிகளும் வாணவேடிக்கைகளும் சிறப்பாக நடைபெற்றன.

பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தனர்.

11:05

சீன அதியுயர் தலைவர் ஷிச்சின்பிங் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தில் பேசிய போது, முன்னேற்றப் போக்கில் அமைதியான வளர்ச்சிப் பாதையில் சீனா எப்போதுமே நடைபோட்டு, ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறும் திறப்பு தொலைநோக்கைச் செயல்படுத்தி, உலகின் பல்வேறு நாடுகளின் மக்களுடன் இணைந்து, மனிதகுலத்தின் பொது எதிர்காலச் சமூகத்தைத் தொடர்ந்து உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

10:39

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம் அக்டோபர் முதல் நாள் செவ்வாய்கிழமை பெய்ஜிங்கிலுள்ள தியன் ஆன் மென் சதுக்கத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் இராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் முக்கிய உரை நிகழ்த்துகிறார்.

இக்கொண்டாட்டத்துக்குப் பிறகு பிரமாண்டமான இராணுவ அணி வகுப்பு நடைபெற உள்ளது. சீன இராணுவம் சீர்திருத்தத்துக்குப் பின் அணி வகுப்பு நடத்துவது இதுவே முதன்முறை. அணி வகுப்பில் பங்கெடுப்பவர்களின் எண்ணிக்கை 15000 ஆகும். அதற்குப் பிறகு, ஒரு லட்சம் பொது மக்கள் பங்குபெறும் பேரணி நடைபெற உள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்