2ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியின் துவக்க விழா

2019-11-05 14:04:44
Comment
பகிர்க
பகிர்க Close
Messenger Messenger Pinterest LinkedIn
14:04

வெளிநாட்டுத் திறப்புக்கான சீன அரசின் 5 நடவடிக்கைகளை அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 5ஆம் நாள் தெரிவித்தார்.

சந்தைத் திறப்பை விரிவாக்குவது, திறப்பு அமைப்புமுறையை மேம்படுத்துவது, தொழில் நடுத்துவதற்கான சூழ்நிலையைச் சீராக்குவது, பல தரப்பு ஒத்துழைப்பு ஆழமாக்குவது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானத்தை முன்னேற்றுவது ஆகியவை இந்த 5 நடவடிக்கைகளாகும்.

11:24

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 5ஆம் நாள் கூறுகையில், உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்தத்தைச் சீனா ஆதரிக்கிறது எனக் குறிப்பிட்டார். அதோடு, ஐ.நா, 20 நாடுகள் குழு, ஆசிய-பசிபிக் பொருளாதார மற்றும் ஒத்துழைப்பு அமைப்பு, பிரிக்ஸ் நாடுகள் முதலிய ஒத்துழைப்பு அமைப்பு முறையில் சீனா தொடர்ந்து ஆக்கப்பூர்வமாக கலந்து கொண்டு, பொருளாதார உலகமயமாக்கத்தைக் கூட்டாக முன்னேற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர் தர வளர்ச்சியை சீனா தொடர்ந்து முன்னேற்றி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது, சீனா, 137 நாடுகள் மற்றும் 30 சர்வதேச அமைப்புகளுடன் 197 ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையைக் கூட்டாகக் கட்டியமைக்கும் ஒத்துழைப்பு ஆவணங்களில் கையொப்பமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

11:09

பன்முகத் திறப்புக்கான புதிய அமைப்புமுறையைக் கட்டியமைப்பதைச் சீனா விரைவுப்படுத்தி வருகின்றது. இது பற்றி ஷி ச்சின்பிங் கூறுகையில், இறக்குமதியின் பங்கில் சீனா மிகவும் கவனம் செலுத்தி, சுங்க வரியைத் தொடர்ந்து குறைக்கும் என்றும், சீனச் சந்தை மிகப் பெரிய அளவுடையது. வெளிநாட்டு நிறுவனங்களை வரவேற்கின்றோம் என்றும் குறிப்பிட்டார்.

10:49

பல்வேறு தரப்புகள் திறப்பும், பொதுப் பகிவும் கொண்ட உலகப் பொருளாதாரத்தைக் கூட்டாக உருவாக்க வேண்டுமென்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 5ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் வேண்டுகோள் விடுத்தார்.

அவர் கூறுகையில், 2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சி பற்றிய ஐ.நாவின் நிகழ்ச்சி நிரலைப் பல்வேறு தரப்புகளும் செயல்படுத்தி, வளர்ச்சி குறைந்த நாடுகளுக்கான ஆதரவை அதிகரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

10:45

தற்போது உலகப் பொருளாதாரம் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தனியொரு நாடு தீர்க்கமுடியாது என்று ஷி ச்சின்பிங் 5ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் தெரிவித்தார். எந்த ஒரு நாடும் தன் சொந்த நலன்களை மனித குலத்தின் நலன்களுக்கு மேலாக வைக்கக் கூடாது என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

திறப்பு மற்றும் ஒத்துழைப்புத் தன்மை வாய்ந்த உலகப் பொருளாதாரத்தைக் கூட்டாக கட்டியமைக்க வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சன்பிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திறப்பில் ஊன்றி நின்று ஒத்துழைப்பை ஆழமாக்க வேண்டும். அதேவேளையில், பாதுகாப்பு வாதத்தையும் ஒரு தரப்பு வாதத்தையும் எதிர்த்து சந்தை தேவையைக் கூட்டாக வளர்க்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.


10:44

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 5ஆம் நாள் 2ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியின் துவக்க விழாவில், “திறப்பான ஒத்துழைப்பும், பொதுச் சமூகமும்” என்ற தலைப்பில் தலைமை உரை நிகழ்த்தினார்.

முதலாவது இறக்குமதிப் பொருட்காட்சியில், வெளிநாட்டுத் திறப்புப் பணிக்கான 5 நடவடிக்கைகளையும், ஷாங்காய் மாநகரை மேலும் திறப்பு மிகுந்த மாநகராக மாற்றுவதற்குரிய 3 கோரிக்கைகளையும் அவர் முன்வைத்தார். கடந்த ஓராண்டில், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

10:02

2ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி 5ஆம் நாள் முற்பகல் ஷாங்காய் மாநகரில் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அதன் துவக்க விழாவில் கலந்து கொண்டு தலைமை உரை நிகழ்த்தினார்.

பிரான்ஸ் அரசுத் தலைவர் மெக்ரான் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களும், உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குநரும் இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்