குவாங்சி பிரதிநிதிக் குழு விவாதத்தில் லீக்கெச்சியாங் பங்கெடுப்பு

நிலானி 2018-03-07 09:09:31
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

குவாங்சி பிரதிநிதிக் குழு விவாதத்தில் லீக்கெச்சியாங் பங்கெடுப்பு

குவாங்சி பிரதிநிதிக் குழு விவாதத்தில் லீக்கெச்சியாங் பங்கெடுப்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு நிரந்தர உறுப்பினரும் அரசவைத் தலைமை அமைச்சருமான லீக்கெச்சியாங் 6ஆம் நாள் 13ஆது சீனத் தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத் தொடரில் கலந்து கொண்டுள்ள குவாங்சி பிரதிநிதிக் குழுவின் விவாதத்தில் பங்கேற்றார். பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி, வெளிநாட்டுத் திறப்பு, கிராமப்புற வளர்ச்சி முதலிய அம்சங்கள் குறித்து, பெங் ட்சிங் ஹூவா, ச்சேன் வு உள்ளிட்ட பிரதிநிதிகள் உரைநிகழ்த்தினர்.

இவ்விவாதத்தில் உரை நிகழ்த்திய லீக்கெச்சியாங், கடந்த 5 ஆண்டுகளில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் சக்தி மிக்க தலைமையில், குவாங்சி பெரும் சாதனைகளை ஈட்டியுள்ளது என்று தெரிவித்தார். வளர்ச்சியை வலுப்படுத்த, வெளிநாட்டுத் திறப்புப் புத்தாக்கத்தைத் தொடர்ந்து சார்ந்திருக்க வேண்டும். மக்களை மையமாக்கும் வளர்ச்சி சிந்தனையில் எப்போதும் ஊன்றி நிற்க வேண்டும். மேற்குச் சீனாவில் ஒரே ஒரு கடலோர மாநிலமான குவாங்சிக்கு மாபெரும் உள்ளாற்றல் உண்டு. ஷிச்சின்பிங்கை மையமாக கொண்டுள்ள மத்திய கமிட்டியுடன் நெருக்கமாக ஒன்றுபட்டுப் பல்வேறு தேசிய இன மக்களைச் சார்ந்திருந்து குவாங்சி புதிய சாதனைகளை உருவாக்க வேண்டும் என்றும் லீக்கெச்சியாங் தெரிவித்தார். 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்