சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின் பிங்கின் முக்கிய உரை

கலைமணி 2018-03-20 12:00:06
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

13ஆவது சீன தேசிய மக்கள் பேரவையின் முதல் கூட்டத்தொடரின் நிறைவு

13ஆவது சீன தேசிய மக்கள் பேரவையின் முதல் கூட்டத்தொடர், 20ஆம் நாள் காலை நிறைவடைந்தது. ஷீ ச்சின் பிங் சீன அரசுத் தலைவராக மீண்டும் பதவி ஏற்ற பிறகு, முதல் முறையாக உரை நிகழ்த்தினார். அரசியல் அமைப்புச் சட்டம் கொடுத்த கட்டுப்பாட்டினை முன்பு போலவே விசுவாசமாக நிறைவேற்றி, பொது மக்களுக்கு சேவை அளித்து, பொது மக்களின் கண்காணிப்பை ஏற்பேன் என்று இந்த உரையில் அவர் தெரிவித்தார். சீன தனிச்சிறப்புடைய சோஷலிசத்தின் புதிய காலத்தை, அனைவரும் வரவேற்பர். ஒன்றுபட்டு செயல்பட்டு, கூட்டாக பாடுபட்டால், கனவை நனவாக்குவதில் சீன மக்களின் காலடியை எந்த சக்தியும் தடை செய்ய முடியாது என்று அவர் தெரிவித்தார்.

13ஆவது சீன தேசிய மக்கள் பேரவையின் முதல் கூட்டத்தொடரின் நிறைவு கூட்டத்தில், சுமார் 3000 பிரதிநிதிகளின் முன்னால் ஷீ ச்சின் பிங் வாக்குறுதி அளித்தார். 3 நாட்களுக்கு முன், ஷீ ச்சின் பிங், சீன அரசுத் தலைவராக  ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஷீ ச்சின் பிங்கின் உரை, பொது மக்களின் நலனில் அதிக கவனம் செலுத்துகிறது. எவ்வளவு உயர்வான பதவியில் இருந்த போதிலும், நாட்டின் எல்லா வாரியங்களின் பணியாளர்களும், தங்களது நாடு சீனா தான் என்பதை உறுதியாக நினைவில் கொள்ள வேண்டும். வாரியங்களின் பணியாளர்கள் அனைவரும், பொது மக்களுக்கு மனமார்ந்த சேவை அளித்து, பொது மக்களின் நலனுக்கும் இன்பத்துக்கும் பாடுபட வேண்டும் என்று ஷீ ச்சின் பிங் உரையில் வலியுறுத்தினார்.

ஓரளவு வசதியான சமூகத்தை பன்முகங்களிலும் கட்டியமைப்பதில் வெற்றி பெறுவது, சோஷலிச நவீனமயமாக்க நாட்டை பன்முகங்களிலும் கட்டியமைக்கும் புதிய திட்டத்தைத் துவங்குவது, சீன தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சி திட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஆகியவற்றை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாடு வகுத்துள்ளது. இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவது, புதிய நீண்ட பயணமாகும். மேலும் அதிகமான அளவில் மேலும் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு, சீர்திருத்தத்தை பன்முகங்களிலும் ஆழமாக்கி, வெளிநாட்டுத் திறப்பு பணியை விரிவாக்க வேண்டும் என்று ஷீ ச்சின் பிங் வலியுறுத்தி பேசினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்