சீன-இந்திய உறவு:டிராகனும் யானையும் இணைந்து நடனமாட வேண்டும்

மதியழகன் 2018-03-08 16:27:39
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-இந்திய உறவு: டிரானும் யானையும் இணைந்து நடனமாடும்

சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ, 8ஆம் நாள் காலை சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத் தொடரின் செய்தியாளர் கூட்டத்தில் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

இக்கூட்டத்தில், சீனாவின் வெளியுறவுக் கொள்கை, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற ஒத்துழைப்பு முன்மொழிவின் எதிர்காலம், இந்தியா, அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் மற்றும் ஆப்பிரிக்காவுடனான உறவுகள், கொரிய தீபகற்பத்தின் நிலைமை உள்ளிட்டவை பற்றி அவர் முக்கியமாக விளக்கிக் கூறினார்.

சீன-இந்திய உறவு: டிரானும் யானையும் இணைந்து நடனமாடும்

இவ்வாண்டில் சீன-இந்திய உறவை சீனா எப்படி கொண்டு செல்லும் என்ற இந்திய செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த போது:

சீன-இந்திய உறவின் எதிர்காலம் குறித்து, இரு நாட்டுத் தலைவர்கள் முக்கிய நெடுநோக்கு பொதுக் கருத்துக்களை உருவாக்கியுள்ளனர். அதாவது, சீன டிராகனும் இந்திய யானையும் மோதக் கூடாது. மாறாக, இணைந்து நடனமாட வேண்டும் என்று வாங்யீ குறிப்பிட்டார்.

தலா 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இரண்டு வளரும் நாடுகளும் நவீனமயமாக்கலை நோக்கிச் சென்ற வண்ணம் உள்ளன. இதற்காக, ஒன்றை ஒன்று புரிந்து கொண்டு ஆதரவு அளிப்பது மிக முக்கியமானது. இந்நிலையில், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நம்பிக்கை பிரச்சினையைத் தீர்ப்பது அவசரமானது. அரசியல் நம்பிக்கை இருந்தால், இமய மலை கூட நட்பார்ந்த பரிமாற்றத்தைத் தடுக்க முடியாது. அது இல்லாமல், சமவெளி கூட நம்மை இணைக்க முடியாது. சந்தேகம் மற்றும் கருத்துவேற்றுமை ஆகியவற்றுக்குப் பதிலாக, நம்பிக்கை மற்றும் பேச்சுவார்த்தை மூலம் இரு தரப்பும் ஒத்துழைப்புடன் எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்று வாங் யீ நம்பிக்கை தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்