அரசியல் அமைப்பு சட்ட திருத்த வரைவு ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு பன்னாடுகளின் கவனம்

2018-03-12 16:06:53
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் 13ஆவது தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத்தொடரில் 11ஆம் நாள் பிற்பகல் அரசியல் அமைப்பு சட்டத் திருத்த வரைவு வாக்கெடுப்பு மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பன்னாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள் இதை வெகுவாக பாராட்டினர். சீன அரசியல் அமைப்பு சட்டத்தின் திருத்தம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

சீன அரசியல் அமைப்பு சட்டத்தின் திருத்தம், நாட்டின் வழிகாட்டல் சிந்தனை, காலத்திற்கு ஏற்ப வளர்வதை நனவாக்கி, புதிய காலத்தில் சீனாவின் வளர்ச்சியை மேலும் உத்தரவாதம் செய்யும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை மேலும் வலுப்படுத்தி, சீனாவின் பல்வகை லட்சியங்கள் சரியான திசையில் முன்னேறுவதை உத்தரவாதம் செய்யும். அமைதி, வளர்ச்சி, ஒத்துழைப்பு, கூட்டு வெற்றி ஆகியவை படைத்த யுகத்தின் போக்கிற்கு ஏற்ப, உலகின் அமைதியைப் பேணிக்காத்து, கூட்டு வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு சீனா மேலதிக பங்காற்றும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்